கோவை தனியார் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ரம்யா நம்பீசன்
மலையாளத்தில் இருந்து தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் ரீமேக் செய்யும் படங்கள் வெற்றி பெறுவது திரைப்படத் துறைக்கு ஆரோக்கியமே என பிரபல நடிகையும் பின்னணி பாடகியும் ஆன ரம்யா நம்பீசன் கோவையில் தெரிவித்துள்ளார்.
Advertisment
கோவை கணுவாய் பகுதியில் காலி வீட்டு மனைகள் மற்றும் வீடுகள் கட்டி தருவது, உயர் சொகுசு வில்லாக்கள் விற்பனை செய்வது என வீட்டுமனை தொடர்பான துறையில் முன்னனி நிறுவனமாக ஜே.எம்.ஜே.ஹவுசிங் நிறுவனம் உள்ளது.
இந்நிலையில் ஜே.எம்.ஜே.ஹவுசிங் நிறுவனத்தின் கோவை தடாகம் சாலை பிரதான சாலையோரத்தில் உள்ள புதிய ஜாய் பாரடைஸ் எனும் புதிய வீட்டு மனைகளுக்கான விற்பனை துவக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகையும் பின்னணி பாடகியுமான ரம்யா நம்பீசன் கலந்து கொண்டார்.
கோவை தனியார் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ரம்யா நம்பீசன்
அப்போது பேசிய ரம்யா நம்பீசன், திரைப்பட பின்னணி பாடகி வாணி ஜெயராம் நம்மை விட்டு பிரிந்தது மீளாத்துயரமாக வேதனை அளிக்கிறது, என்று கூறினார்.
தற்போது ஒ.டி.டி. தளம் வெப் தொடர்களில் நடித்து வருகிறேன். வெப் தொடர்கள் தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வளர்ந்து வரும் நடிகர் நடிகைகள் உள்ளிட்ட அனைவருக்கும் வெப் தொடர்கள் நல்ல வாய்ப்பாக உள்ளது, என்று கூறினார்.
கோவையில் செய்தியாளர்களின் கேள்விக்கு ரம்யா நம்பீசன் பதில் அளித்தப்போது
ரீமேக் படங்கள் குறித்த கேள்விக்கு, மலையாளத்தில் இருந்து தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் ரீமேக் செய்யும் படங்கள் வெற்றி பெறுவது திரைப்பட துறைக்கு ஆரோக்கியமே என்று ரம்யா நம்பீசன் தெரிவித்தார்.
மேலும் பத்திரிகையாளர்கள் சந்திப்பை தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரம்யா நம்பீசன் அவர் பாடிய பைவ் பைவ் என்ற பாடலை மேடையில் பாடி அசத்தினார்.
பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil