யார் ‘கண்’ பட்டுச்சோ தெரியலையே… பிக் பாஸ் ரம்யா பாண்டியனுக்கு சிகிச்சை!

நடிகை ரம்யா பாண்டியன் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. ரசிகர்கள் பலரும் கவலையடைந்து ரம்யாவுக்கு என்ன ஆச்சு என சமூக வலைதளங்களில் டிஸ்கஸ் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

Actress Ramya Pandian under Eye Laser Treatment News : தேசிய விருதுப் பெற்ற ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். சினிமாவில் ரீச் ஆனதை விட, சின்னத்திரையில் பலமடங்கு தனது செல்வாக்கை உயர்த்திக் கொண்டு வருகிறார். குறிப்பாக பிக்பாஸ் சீசன் 4-ல் முக்கிய போட்டியாளர்களுள் ஒருவராகவும் விளங்கியவர். பிக்பாஸ் ரசிகர்கள் பலரின் மனதில் நீங்க இடம்பிடித்தவர் என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு ரம்யா பாண்டியன் பிரபலம்.

பிக்பாஸ் சீசன் 4-ல் டைட்டில் வின்னராக வெற்றி பெற்ற நடிகர் ஆரியை, நிகழ்ச்சியில் கார்னர் செய்து கடுப்பு ஏற்றி வந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். சில தினங்களில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு, போட்டோ சூட்டிங்கில் பிஸியாக இருந்தார். அவரது, பல போட்டோக்கள் இணையத்தில் வைரலாகியது.

இந்நிலையில், நடிகை ரம்யா பாண்டியன் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. ரசிகர்கள் பலரும் கவலையடைந்து ரம்யாவுக்கு என்ன ஆச்சு என சமூக வலைதளங்களில் டிஸ்கஸ் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

இந்த நிலையில், அந்த செய்தியை உறுதிப்படுத்தும் விதமாக, அவரது சகோதரி சுந்தரி பாண்டியன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அவரது பதிவில், ‘நடிகை ரம்யா பாண்டியன் கண்ணில் லேசர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு அவர் ஓய்வில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் உங்களிடம் பேசுவார். உங்கள் அனைவரின் அன்பிற்கும் நன்றி’, என பதிவிட்டுள்ளார்.

ரம்யாவுக்கு என்ன ஆச்சுனு தெரியாத ரசிகர்கள், அவரது தங்கை இன்ஸ்டாகிராமில் ரம்யா சிகிச்சையில் இருப்பதை உறுதிப்படுத்தியவுடன், வேண்டுதலிலும், நலம் விசாரிப்புகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Web Title: Actress ramya pandian under eye laser treatment news fans reaction

Next Story
சிவப்புத் தோலும் பாலியல் தேர்வும்… கறுப்பு என்பது வெறுப்பா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com