இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா தற்போது தனது சமூகவலைதளத்தில் ஒரு மயில் படத்தை பகிர்ந்துள்ள நிலையில், அதே மயில் இருக்கும் இடத்தில் விஜய் தேவரகொண்டா பேட்டி அளித்த வீடியோ வைரலாகி வருவதால், இருவரும் ஒரே இடத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
கன்னட சினிமாவில் அறிமுகமாகி, தற்போது இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக றேஷ்னல் க்ரஷ் என்று அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா. தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் கீதா கோவிந்தம் படத்தில் நடித்த இவர், அவருடன் காதலில் இருப்பதாக தகவல் வெளியானது. அதனைத் தொடர்ந்து டியர் காம்ரேட் என்ற படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.
/indian-express-tamil/media/media_files/rashmika-manthana-2jpg)
தமிழல் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் இணைந்து நடித்திருந்த ராஷ்மிகா தற்போது இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு இவர் ரன்பீர் கபூருடன் இணைந்து நடித்திருந்த அனிமல் படம் வசூலில் சாதனை படைத்திருந்தாலும் கடுமையாக விமர்சனங்களை எதிர்கொண்டது. அதே சமயம் தற்போது புஷ்பா 2 உள்ளிட்ட சில தெலுங்கு படங்களிலும், சாவா என்ற இந்தி படத்திலும் நடித்து வருகிறார்.
இதனிடையே நாளை (ஏப்ரல் 05) தனது பிறந்த நாளை கொண்டாட உள்ள ராஷ்மிகா மந்தனா, தனது பிறந்தநாள் வாரத்திற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருப்பதை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். நடிகர் விஜய் தேவர்கொண்டாவுடன் காதல் என்று கிசுகிசுக்கப்பட்ட ராஷ்மிகா மந்தனா அவருடன் தனது பிறந்த நாளை கொண்டாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/rashmika-manthana-4jpg)
ஏற்கனவே ராஷ்மிகா மந்தனா விஜய் தேவரகொண்டா இருவரும் மாலத்தீவில் விடுமுறையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒன்றாக ஒரே இடத்தில் இருந்து வெளியிட்டதால், சமூகவலைதளங்களில் இவர்கள் இருவரும் ஒன்றாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இப்போதும் அதேபோல் ஒரு பதிவின் மூலம் இவர்கள் ஒன்றாக இருப்பது தெரியவந்துள்ளது. ராஷ்மிகா, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ரிசார்ட்டில் அழகான மயிலின் படத்தை பகிர்ந்துள்ளார்.
அதேபோல் விஜய் தேவர்கொண்டா தனது வரவிருக்கும் திரைப்படமான 'தி ஃபேமிலி ஸ்டார்' பற்றி பேசும் வீடியோவைப் வெளியிட்டுள்ளார்ஷ. ராஷ்மிகா வெளியிட்டிருந்த அந்த மயில் போல், விஜய் தேவரகொண்டா வெளியிட்ட வீடியோவின் பின்னணியில் ஒரு மயில் இருந்தது. இதன் மூலம் விஜய் தேவர்கொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒன்றாக இருப்பதாக ஊகங்களை எழுப்பியது.
இருவரும் ஜனவரி 2023 இல், மாலத்தீவில் விடுமுறையில் காணப்பட்ட பின்னர் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடனான ராஷ்மிகா மந்தனாவின் உறவு குறித்து வதந்திகளும் யூகங்களும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“