கடந்த 2016-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கிரிக்கி பார்ட்டி என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. முதல் படத்திலேயே பிரபலமான இவர், அடுத்து புனித் ராஜ்குமார் நடிப்பில் வெளியான அஞ்சானி புத்ரா படத்தில நடித்தார்.

தொடர்ந்து 2018-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான சலோ என்ற படத்தில் நடித்த ராஷ்மிகா தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக கீதா கோவிந்தம் படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் ஏராளமான ரசிகர்களை பெற்ற தொடர்ந்து தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இடையில் சுல்தான் படத்தின் மூலம் தமிழிலும், குட்பாய் படத்தின் மூலம் இந்தியிலும் அறிமுகமானார் ராஷ்மிகா.

தற்போது அனிமல் என்ற இந்தி படத்திலும், அல்லு அர்ஜூனுடன் புஷ்பா படத்தின் 2-ம் பாகத்திலும் நடித்து வருகிறார். இவரின் படங்கள் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்றதால் திருமணத்தை நிறுத்திவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தினார்.

சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ராஷ்மிகா தற்போது அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.

அந்த வகையில் தற்போது ராஷ்மிகா ஸ்டைலிஷாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil