scorecardresearch

#தளபதி66 படத்தில் இணைந்த ராஷ்மிகா.. கொண்டாடும் விஜய் ரசிகர்கள்!

சில படங்களில் மட்டுமே நடித்து, இந்தியா முழுவதும் பிரபலமான நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு ஏப்ரல் 5 பிறந்தநாள். நேற்று அவரது பிறந்தநாள் பரிசாக, தளபதி 66 படத்தில் ராஷ்மிகா ஹீரோயினாக நடிப்பதாக தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

Thalapathy 66 Movie
Actress Rashmika Mandanna joins Vijay Thalapathy 66 movie

தளபதி விஜய் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா இணைந்துள்ளார். தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் ராஷ்மிகாவின் பிறந்தநாளான ஏப்ரல் 5 அன்று இந்த அறிவிப்பை வெளியிட்டது.

இந்த அறிவிப்பு வெளியான உடனேயே, ராஷ்மிகாவை ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கினர்.

பிரபல தெலுங்கு இயக்குனர் வம்ஷி பைடிப்பள்ளி தளபதி 66 படத்தை இயக்குகிறார்.

கடந்த ஆண்டு செப்டம்பரில், ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ், தங்களின் வரவிருக்கும் தமிழ் படத்தில் விஜய் நடிப்பார் என்று அறிவித்தது.

“மிகவும் மகிழ்ச்சியுடன், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸில் நாங்கள் தளபதி விஜய்யுடன் எங்களின் முதல் தமிழ் படத்தை அறிவிக்கிறோம். இது நிச்சயமாக எங்களுக்கு பெருமை சேர்க்கும் திட்டமாக இருக்கும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டது.

ஏப்ரல் 13 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் தனது பீஸ்ட் திரைப்படத்தின் வெளியீட்டிற்காக விஜய் காத்திருக்கிறார்.

முன்னதாக, நடிகை ராஷ்மிகா, பீஷ்மா படத்துக்கான ப்ரோமோஷன் ஒன்றின் போது, ​​ வெட்கத்துடன் தமிழ் இளைய தளபதி விஜய் மீது தனக்கு க்ரஷ் இருப்பதை வெளிப்படுத்தினார்.

பட ஹிட் படங்களில் நடித்த ராஷ்மிகா தனக்கென ஒரு நிலையான ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி உள்ளார். இது ராஷ்மிகாவை தேசிய அளவில் க்ரஷ் ஆக்கியது. ராஷ்மிகாவின் ரசிகர் பட்டாளம் தென் மாநிலங்களில் மட்டும் இல்லாமல் நாடு முழுவதும் உள்ளது.

இதற்கிடையில், ராஷ்மிகா மந்தனா, மிஷன் மஜ்னு படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actress rashmika mandanna joins vijay thalapathy 66 movie