/tamil-ie/media/media_files/uploads/2021/12/rashmika-1.jpg)
தமிழ் சினிமாவில் தளபதி விஜய் மீது க்ரஷ்... வெட்கப் பூரிப்புடன் பேசிய ராஷ்மிகா மந்தனா!
நடிகை ராஷ்மிகா மந்தனா மிகக் குறுகிய காலத்தில் தென்னிந்தியத் துறையில் மிக பிரபலமான நடிகையாக மாறியுள்ளார். கீதா கோவிந்தம், பீஷ்மா மற்றும் புஷ்பா: தி ரைஸ் போன்ற படங்களில் தனது நடிப்பால், ராஷ்மிகா பார்வையாளர்களின் இதயங்களை வென்றார். கடந்த ஆண்டு, கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் மூலம் கோலிவுட்டிலும் நுழைந்தார்.
ராஷ்மிகாவுக்கு ஒரு தமிழ் நடிகருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது மிகப்பெரிய கனவு. ஆம், பீஷ்மா படத்துக்கான ப்ரோமோஷன் ஒன்றின் போது, ​​ராஷ்மிகா வெட்கத்துடன் தமிழ் இளைய தளபதி விஜய் மீது தனக்கு க்ரஷ் இருப்பதை வெளிப்படுத்தினார்.
பல தெலுங்கு படங்களில் தோன்றிய பிறகு, ராஷ்மிகா மந்தனா தனக்கென ஒரு நிலையான ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி உள்ளார். பல இளைஞர்களின் க்ரஷ் ஆகவும் மாறியிருக்கிறார்.
ராஷ்மிகா எப்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பவர். அதில் தனது புதிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு, ரசிகர்ளுடன் எப்போதும் கனெக்டிவாக இருப்பார். இது ராஷ்மிகாவை தேசிய அளவில் க்ரஷ் ஆக்கியது.
ராஷ்மிகாவின் ரசிகர் பட்டாளம் தென் மாநிலங்களில் மட்டும் இல்லாமல் நாடு முழுவதும் உள்ளது. ராஷ்மிகாவின் ரசிகர்கள் தங்களை ரோஷியன்ஸ் என்று அன்புடன் அழைக்கின்றனர்.
புஷ்பா: தி ரைஸ் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பிறகு, ராஷ்மிகா இரண்டு பாலிவுட் படங்களில் நடிக்கிறார். சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு ஜோடியாக மிஷன் மஜ்னு மற்றும் அமிதாப் பச்சனுடன் குட்பை ஆகிய படங்களின் மூலம் ராஷ்மிகா, பாலிவுட்டிலும் அறிமுகமாகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us