நடிகர் விஜய்யின் படத்தில் குழந்தை நட்சத்திரமாகி இன்று விஜய் டிவியின் முன்னணி சீரியலில் கதாநாயகியாக கலக்கி வரும் நடிகை ரவீனா தனது 18வது வயதில் தனது நெருங்கிய நண்பரை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் நேசர்ன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து 2014ம் ஆண்டு வெளியான ஜில்லா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் நடிகை ரவீனா. விஜய் படத்தில் சினிமாவில் அறிமுகமான ரவீனா, அடுத்து விஷ்ணு விஷால், அமலா பால் நடித்த ராட்சசன் படத்தில் மாணவியாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். இவர் சினிமாவில் நடித்தாலும் சீரியலிலும் ரியாலிட்டி ஷோக்களிலும் நடித்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் 2.0 நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். அதே ஜீ தமிழ் டிவியில் பூவே பூச்சூடவா சீரியலில் சின்னத்திரையில் நடித்தார். ராட்சசன் படத்தில் ரவினாவின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.
தற்போது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் 2 சீரியலில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் மத்தியில் வரவேற்பைப் பெற்று கலக்கி வருகிறார். மௌன ராகம் 2 சீரியலில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் பாராட்டப்படுகிறது.
இந்த நிலையில், ரவீனா தனது 18-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார். பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். ரவீனா பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவருடைய நெருங்கிய நண்பர் கலந்துகொண்டுள்ளார். அப்போது, ரவீனா தனது நெருங்கிய நண்பர் தீபக் ராஜாவுடன் எடுத்துகொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் குறித்து அவர் குறிப்பிடுகையில், “என்னுடைய இந்த நாளை மறக்கமுடியாத நாளக மாற்றியதற்கு நன்றி… அன்பே இதுவரை நடந்தவற்றில் மிகச் சிறந்தது நீங்கள் தான… தயவு செய்து நிரந்தரமாக இணைந்து இருக்க முடியுமா? எனது பிறந்தநாளில் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ளுங்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.
இதன் மூலம் நடிகை ரவீனாவின் 18வது பிறந்தநாளில் தனது நெருங்கிய நண்பர் தீபக் ராஜாவை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் சிலர் வாழ்த்துகளையும் சிலர் புகைச்சலையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“