Advertisment

சிங்கப் பெண்ணே… விஜய் பட நடிகை லேட்டஸ்ட் ஹனிமூன் போட்டோஸ்!

Actor vijay’s 'Bigil' movie Actress Reba Monica John's Maldives honeymoon photos viral Tamil News: ஹனிமூனுக்காக மாலத்தீவு சென்றுள்ள 'பிகில்' நடிகை ரேபா மோனிகா தனது கணவருடன் இருந்த அழகிய தருணங்களின் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Actress Reba Monica John's honeymoon viral pics

Actress Reba Monica John Tamil News: நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளிவந்த படம் பிகில். இயக்குநர் அட்லீ இயக்கியிருந்த இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார்.

Advertisment

பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட 'பிகில்' படத்தில் சிங்கப் பெண்ணே பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்தப் பாடல் மற்றும் படத்தின் முக்கிய காட்சிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை ரேபா மோனிகா ஜான்.

publive-image

இவர் கடந்த 2016ம் ஆண்டு மலையாள முன்னணி நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளிவந்த 'ஜெகபோனைட் ஸ்வர்கராஜ்யம்' (JACABONITE SWARKARAJYAM' படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார். தமிழில் 2018ம் ஆண்டு ஜெய் நடிப்பில் வெளிவந்த ஜருகண்டி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். பின்னர் கன்னடம், மலையாளம் படங்களில் நடித்துக்கொண்டிருந்த இவருக்கு பிகில் படம் திருப்புமுனையாக அமைந்தது.

publive-image

ரேபா மோனிகா, கடந்த மே மாதத்தில் சோனி மியூஸிக் வெளியிட்ட "குட்டி பட்டாஸ்" ஆல்பம் பாடலில் 'குக் வித் கோமாளி' புகழ் அஸ்வினுடன் நடமாடி கலக்கி இருந்தார். யூடியூப்பில் வெளியாகி இருந்த இந்தப்பாடல் நல்ல வரவேற்பை பெற்றதோடு இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகியது.

இந்நிலையில், தற்போது ரேபா மோனிகா, தமிழில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகிவரும் 'எஃப்ஐஆர்' படத்திலும், நடிகர் கவினுக்கு ஜோடியாக 'ஆகாஷ் வாணி' என்கிற படத்திலும் நடித்து வருகிறார். மேலும், 'சகலகலா வல்லபா' என்ற கன்னடத் திரைப்படத்திலும், மலையாளத்தில் விஜய் மற்றும் ரஜினி இயக்கி, தெலுங்கு மற்றும் தமிழில் வெளியாகவுள்ள 'அக்டோபர் 31 லேடீஸ் நைட்' ஆகிய படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.

publive-image

இதற்கிடையில், ரேபா மோனிகா தனது நெடுநாள் காதலரான ஜோமான் ஜோசப் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவருக்கு ரசிகர்களும் திரையுலகினரும் வாழ்த்து மழை பொழிந்தனர்.

publive-image
publive-image

இந்த நிலையில், நடிகை ரேபா மோனிகா தனது கணவருடன் ஹனிமூனுக்காக மாலத்தீவு சென்றுள்ளார். தற்போது அங்கு எடுக்கப்பட்ட அழகிய தருணங்களின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றன.

publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image

Entertainment News Tamil Actor Vijay Viral Viral Photo Reba Monica John
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment