/indian-express-tamil/media/media_files/2025/08/08/reehana-2025-08-08-10-33-47.jpg)
ஒரே டேக்ல அசால்டா பண்ணிட்டீங்க; என் நம்பர் வாங்க பெரிய ஹீரோ செய்த தந்திரம்; ரிஹானா ஓபன் டாக்!
சினிமாவின் கவர்ச்சியான உலகத்திற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் கசப்பான உண்மைகளை அவ்வப்போது சில நடிகர்கள் வெளிப்படுத்துவது உண்டு. அப்படி, சமீபத்தில் வாவ் தமிழா என்ற யூடியூப் சேனலில் நடத்தப்பட்ட நேர்காணலில் பேசிய நடிகை ரீஹானா, ஒரு பிரபல நடிகர் தனக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாகவும், அதனை மறுத்ததால் தனக்கு அடுத்த படத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும் கூறி அதிர்ச்சி-ஐ ஏற்படுத்தி உள்ளார்.
சினிமாவில் பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட நடிகர், ஒரு படத்துக்காகத் தன்னை அழைத்ததாக ரீஹானா கூறினார். "அவர் மிகவும் பிரபலமானவர். ஆனால், நடிப்பில் மிகவும் மோசமானவர். நான் ஒரே டேக்கில் என் காட்சிகளை முடித்துவிடுவேன், ஆனால் அவருக்குப் பல டேக்குகள் தேவைப்படும்" என்று ரீஹானா அந்த நடிகரின் நடிப்புத் திறமையைக் கடுமையாக விமர்சித்தார்.
படப்பிடிப்பு முடிந்ததும், எதிர்காலப் பட வாய்ப்புகள் குறித்துப் பேசுவதற்காக, அந்த நடிகர் தன்னுடைய தொலைபேசி எண்ணை கேட்டதாகவும், தான் அவரை நம்பி போன் நம்பரை கொடுத்ததாகவும் ரீஹானா தெரிவித்தார். ஆனால், படப்பிடிப்பு முடிந்த பிறகு, அந்த நடிகர் தனக்கு inappropriate குறுஞ்செய்திகளை அனுப்பத் தொடங்கியதாக கூறினார். அந்த மேஜேஜ்களில் அவர் ரீஹானாவின் அழகைப் பாராட்டியும், தன்னுடைய தனிப்பட்ட விருப்பங்களை வெளிப்படுத்தியும் பேசியுள்ளார். அவரது உள்நோக்கத்தைப் புரிந்துகொண்ட ரீஹானா, உடனடியாக அவரை Block செய்ததாக ரீஹானா கூறினார்.
அந்த நடிகரைத் தொடர்புகொள்வதை நிறுத்தியதால், அடுத்த படத்தில் தனக்குக் கிடைத்த வாய்ப்பு பறிபோனதாக ரீஹானா வருத்தத்துடன் கூறினார். "நான் ஏற்கனவே அந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தேன். ஆனால், இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, என்னை அந்தப் படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள்," என்று அவர் தெரிவித்தார்.
சினிமாவில் இப்படிப்பட்ட நபர்களிடமிருந்து நடிகைகள் விலகியே இருக்க வேண்டும் என்றும், இல்லையெனில் அது திரை வாழ்க்கையைப் பாதிக்கும் என்றும் ரீஹானா மற்ற நடிகைகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும், "சினிமாவில் சமரசம் செய்துகொள்ளத் தயாராக இருக்கும் பெண்களும், அதைப் பயன்படுத்திக்கொள்ளும் ஆண்களும் இருக்கிறார்கள்," என்று அவர் நேரடியாகத் தனது கருத்தைப் பதிவு செய்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.