சென்னை, ஜாஃபர்கான்பேட்டை அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் மஞ்சன் (55). இவர் நேற்றிரவு (ஆக.27) மதுபோதையில் ஜாஃபர்கான்பேட்டை பச்சையப்பன் தெரு சாலையோரத்தில் படுத்து கிடந்துள்ளதாக தெரிகிறது.
அப்போது, இரவு 8 மணியளவில் அந்த வழியாக வந்த கார் மஞ்சன் மீது ஏறி இறங்கியதில் அவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இதுகுறித்து குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்கபதிவு செய்து விசாரித்தனர். அதில் காரை ஓட்டி வந்தது எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த பாண்டி (25) என்பதும், இவர் நடிகை ரேகா நாயரின் வீட்டில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.
மேலும், கார் நடிகை ரேகா நாயரின் பெயரில் இருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து நடிகை ரேகா நாயருக்கு சொந்தமான வாகனத்தை பறிமுதல் செய்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். இதையடுத்து போலீசார் பாண்டியை கைது செய்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“