/indian-express-tamil/media/media_files/wNQGP5fjP7BIRo4Ywcg6.jpg)
ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பாலரின் இன்றைய சமூக நிலை குறித்து வாவ் தமிழா யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில், நடிகை ரேகா நாயர் தனது கருத்துகளை தெரிவித்துள்ளார்.
நடிகை ரேகா நயார், சினிமா மற்றும் சின்னத்திரை வட்டாரத்தில் பிரபலமானவராக வலம் வருகிறார். முன்னணி தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றிய அவர், சின்னத்திரை தொடர்கள் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். அந்த வகையில், 'வம்சம்', 'ஆண்டாள் அழகர்', 'பகல் நிலவு', 'நாம் இருவர் நமக்கு இருவர்', 'பைரவி', 'பூவே உனக்காக' போன்ற பல சீரியல்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார்.
கடந்த 2022-ம் ஆண்டு பார்த்திபன் இயக்கத்தில் வெளியான 'இரவின் நிழல்' படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் ரேகா நாயர் நடித்தார். இந்நிலையில், வாவ் தமிழா யூடியூப் சேனலுக்கு நடிகை ரேகா நாயர் நேர்காணல் அளித்திருந்தார். அதில், சமூகத்தில் நிலவி வரும் ஆண்களின் நிலை குறித்து தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
அதன்படி, "இலக்கிய கூட்டங்களில் பங்கேற்க செல்லும் போது சேலை அணிந்து செல்வேன். சாதாரணமாக கடைகளுக்கு பொருட்கள் வாங்க செல்லும் போது சுடிதார் அணிந்திருப்பேன். யோகா செய்யும் போது டீசர்ட், பேன்ட் அணிந்து கொள்வேன். இப்படி ஒவ்வொரு சூழலுக்கு ஏற்ற வகையில் எனக்கு பொருத்தமான ஆடையை அணிவேன்.
நமது ஊரில் தான் பேன்ட், சர்ட் அணிந்தால் தலையில் பூ வைக்க கூடாது என்று கூறுகின்றனர். ஆனால், அவ்வாறு சொல்வது தவறு. நமக்கு விருப்பமான வகையில் பூ வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு கூறுவதால் என்னை சிலர் பூமர் ஆண்டி என்று கூறினார்கள். இப்படி மற்றவர்கள் கூறுவது குறித்து நான் கவலைப்படுவதில்லை. சில நேரங்களில் நான் பூமர் தனமாக தெரியலாம். சில நேரத்தில் பார்க்க புரட்சியாளராக தெரியலாம்.
ஆண்களுக்கு ஆதரவாக பேசினால் என் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. ஆண்களின் வாக்குகளை பெற்று நான் தேர்தலில் நிற்க போவதில்லை. ஆண்களின் மனநிலையில் இருந்து சில சமயங்களில் நான் சிந்திக்கிறேன். அவ்வாறு பார்க்கும் போது ஆண்கள் பாவமாக தெரிகின்றனர். பெண்கள், தங்களுக்கு பிடித்த சிகையலங்காரம் செய்து கொள்ள முடிகிறது. அடிக்கடி பியூட்டி பார்லருக்கும் செல்லலாம். ஆனால், ஆண்களால் இவ்வாறு செய்ய முடிவதில்லை. இத்தகைய காலநிலை மாற்றங்களால் ஆண்களால் சில விஷயங்களை செய்ய முடியாது" என்று நடிகை ரேகா நாயர் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.