அவரு அங்க... நான் இங்க... எனக்காக பாதி படம் முட்டி போட்டு நடித்த ரகுவரன்: நடிகை ரேவதி ஓபன் டாக்!
நடிகை ரேவதி, ரகுவரன் ஒரு தனித்துவமான நடிகர் என்றும் அஞ்சலி படத்தில் குழந்தைகளுடன் நடிக்கும்போது, ரகுவரன் முழங்கால்களில் அமர்ந்து நடித்ததாகவும், அவருடன் நடித்த அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்துள்ளார்.
நடிகை ரேவதி, ரகுவரன் ஒரு தனித்துவமான நடிகர் என்றும் அஞ்சலி படத்தில் குழந்தைகளுடன் நடிக்கும்போது, ரகுவரன் முழங்கால்களில் அமர்ந்து நடித்ததாகவும், அவருடன் நடித்த அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்துள்ளார்.
திரைப்பட உலகில், சில நட்சத்திர ஜோடிகளின் பங்களிப்பு தனித்துவமானது. ரகுவரன் மற்றும் ரேவதி அத்தகைய ஒரு இணை. தங்கள் யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த இந்த இரு நட்சத்திரங்களும், சில மறக்க முடியாத படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
Advertisment
அவர்கள் இணைந்து நடித்த படங்களில், அஞ்சலி (1990) திரைப்படம் மிகவும் குறிப்பிடத்தக்கது. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம், ரகுவரன் மற்றும் ரேவதி ஆகிய இருவரின் நடிப்புத் திறனையும் முழுமையாக வெளிப்படுத்திய ஒரு படைப்பாகும். இப்படத்தில் அவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தது, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த படத்தில் நடிகர் ரகுவரனுடன் நடித்த அனுபவம் குறித்து நடிகை ரேவதி டூரிங் டாக்கீஸ் சினிமா யூடியூப் பக்கத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
"ரகுவரன் ஒரு மிக தீவிரமான நடிகர், அஞ்சலி திரைப்படத்தில் குழந்தைகளுடன் அவர் நடிக்க வேண்டியிருந்தது. படப்பிடிப்பில் ரகுவரன் ஒரு பக்கமும், நான் மறுபக்கமும், குழந்தைகள் நடுவிலும் இருப்பார்கள்.
Advertisment
Advertisements
அப்போது ஒளிப்பதிவாளர் மது அம்பாட் அடிக்கடி சொல்வார், 'சினிமா ஸ்கோப் இப்படி இருந்தா நல்லா இருந்திருக்குமே.' அதாவது, சாதாரணமாக இல்லாமல், இப்படி இருந்தால் சிறப்பாக இருக்கும் என்பார். ரகுவரன் கிட்டத்தட்ட பாதிப் படத்திற்கும் முழங்கால்களில்தான் அமர்ந்து நடித்தார்.
அது அவருக்கு வசதியாக இல்லை என்றாலும், குழந்தைகள் அருகே இருப்பதால், எல்லோரும் ஒரே பிரேமில் வர வேறு வழியில்லை. அதனால் அவர் எப்போதும் அமர்ந்தே பேசுவார். ரகுவரனுடன் நடித்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் மிகவும் தீவிரமான நடிகர், எனக்கு அவர் மிக தொழில்முறை நடிகர் எனப்பட்டது. அதோடு, இதை மணிரத்னம் கையாண்டதால், அது மிகவும் எளிதாக இருந்தது. நாம் அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை.
ரகுவரனின் அர்ப்பணிப்பு, குறிப்பாக குழந்தைகளுடன் நடிக்கும்போது அவர் மேற்கொண்ட சிரமங்கள், ஒரு கலைஞனாக அவரது தொழில்முறை அணுகுமுறையை எடுத்துக்காட்டுகிறது. மணிரத்னத்தின் இயக்கம் ரகுவரனின் தீவிரமான நடிப்பை மேலும் மெருகேற்றியது, இது படக்குழுவினருக்கு எளிதாக அமைந்தது" என்றார்.