நடிகை ரியாமிகா தற்கொலை... என்ன தான் நடந்தது?

நடிகை ரியாமிகா நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட வழக்கில் முதற்கட்ட விசாரணை முடிந்தது. இதில் நடிகையின் தம்பி மற்றும் காதலனிடம் விசாரணை நடந்தது.

சென்னை வளசரவாக்கத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் ரியாமிகா(26). இவர் குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம், எக்ஸ் வீடியோஸ், அகோரி உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவருடன் இவரது தம்பி பிரகாஷ் தங்கி உள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை நீண்டநேரம் ஆகியும் ரியாமிகா, அவரது அறையில் இருந்து வெளியே வரவில்லை. பிரகாஷ், ரியாமிகாவின் காதலன் தினேஷ் ஆகியோர் அறையின் கதவை தட்டிப்பார்த்தும் திறக்கவில்லை.

பின்னர் அவர்கள் பின்புறம் உள்ள ஜன்னல் வழியாக பார்த்தபோது ரியாமிகா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

நடிகை ரியாமிகா தற்கொலை விசாரணை

இதுகுறித்து போலீசார் விசாரணையில், ரியாமிகா, தினேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். நேற்று முன் தினம் வெளியே சென்று விட்டு இரவு தாமதமாக வந்துள்ளார் தினேஷ். தனது காதலனை பார்க்க வேண்டும் என்று செல்போனில் தினேஷை அழைத்துள்ளார். ஆனால் நள்ளிரவு ஆகி விட்டதால் காலையில் வந்து பார்ப்பதாக கூறி செல்போன் இணைப்பை துண்டித்துள்ளார்.

இதையடுத்து ரியாமிகா தம்பி பிரகாஷ் இரவு நேரத்தில் எதற்கு போன் செய்து தொந்தரவு செய்கிறாய் என்று கேட்டு விட்டு அவரது அறைக்கு தூங்க சென்று விட்டார்.

நேற்று காலை காதலன் தினேஷ் வீட்டிற்கு வந்துள்ளார். ரியாமிகா தினமும் தாமதமாக எழுந்து கொள்வதால் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டனர். இருவரும் சேர்ந்து சமையல் செய்துவிட்டு ரியாமிகாவை எழுப்ப முயன்றபோது தான் ரியாமிகா தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

ரியாமிகா வருமானத்தில் தான் அவரது குடும்பம் நடந்து கொண்டிருந்தது. தற்போது சரியாக பட வாய்ப்புகள் இல்லாததாலும் வருமானமும் இல்லை. மேலும் காதலனுடன் தகராறு என பல்வேறு பிரச்சனைகளால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதன் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும், எக்ஸ் வீடியோஸ் படத்தில் அவர் நடித்ததால் அக்கம் பக்கத்தினர் அசிங்கமாக பார்த்ததாகவும், பாலியல் ரீதியான தொல்லைகள் இருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. உண்மையான காரணம என்ன? என்பது விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close