ஆந்திர மாநில சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர் நடிகை ரோஜா. கால் வலியால் அவதிப்பட்டு வந்த அவர், சில தினங்களுக்கு முன் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
Advertisment
இதுதொடர்பாக பல அதிகாரமற்ற தகவல்கள் ஊடகங்களில் வெளியானது.
இந்நிலையில் ரோஜாவின் தற்போதைய உடல்நிலை குறித்து அவரது கணவர் ஆர்.கே.செல்வமணி விளக்கமளித்தார். அவர் கூறுகையில், ரோஜாவுக்கு முதுகெலும்புல பிரச்னை இருக்கு. அது நடக்கும் போது உட்காரும் போது அவுங்களுக்கு சிரமமா இருக்கு. ரோஜா பயணம் செய்ஞ்சுட்டே இருக்காங்க.
Advertisment
Advertisements
அதனால 1,2 வாரங்கள் அவுங்க ஓய்வுல இருக்க வேண்டியிருக்கு. இப்போ நல்ல நடக்கிறங்கா. பயணம் செய்யும் போது கொஞ்சம் கவனமா இருக்கணும். ஜூலை 1ல இருந்து வழக்கமா அவுங்க வேலைய பார்ப்பாங்க, என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“