தென்னிந்திய சினிமாவின் பழம்பெரும் நடிகைகளில் ஒருவராக நடிகை ரோஜாவுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ள நிலையில், தற்போது அவரு மகள் வாரிசு நடிகர் ஒருவருக்கு ஜோடியாக திரைத்துறையில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகைகளில் ஒருவர் ரோஜா. கடந்த 1992-ம் ஆண்டு பிரஷாந்த் நடிப்பில் வெளியான செம்பருத்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், தொடர்ந்து ரஜினிகாந்த், அர்ஜூன், பிரபு. கார்த்திக் சரத்குமார், பிரபுதேவா. சத்யராஜ் உளளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கில், சிரஞ்சீவி மலையாளத்தில் மோகன் லால், மம்முட்டி, என தென்னிந்திய மொழிகளில் பல வெற்றிப்படங்களை கொடுத்த ரோஜா தனது முதல்பட இயக்குனராக ஆர்.கேசெல்வமணியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு அன்சுமாலிகா என்ற மகளும், கிருஷ்ண லோஹித் என்ற மகனும் உள்ளனர்.
தற்போது ஆந்திர அரசியலில் துணை முதல்வராக பொறுபபேற்றுள்ள ரோஜா தீவிர மக்கள் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், அவரது மகள் அன்சுமாலிகா திரைத்துறையில் அறிமுகமான உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது “2021 ஆம் ஆண்டின் சிறந்த சமூக சேவகர்” விருதை வென்றதன் மூலம் தனக்கென ஒரு பெயரைப் பெற்ற அன்சுமாலிகா, ‘தி ஃபிளேம் இன் மை ஹார்ட்’ என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். ஊடகங்களில் பணியாற்றி வரும் இவர் தனது தாயை போலவே விரைவில் நடிப்புத்திறமையை வெளிப்படுத்த உள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளதாகவும், அந்த படத்தில், அவருக்கு ஜோடியாக அன்சுமாலிகா அறிமுகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தில் இருப்பதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘ஆதித்ய வர்மா’வில் அறிமுகமான துருவ் விக்ரம், கொரோனா கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘மஹான்’ படத்திலும் தனது தந்தையுடன் இணைந்து நடித்தார். தொற்றின் போது ஓடிடி தளத்தில் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“