பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ரோஷினி ஹரிபிரியன் சீரியலில் இருந்து விலகுவதாக தகவல் வெளியானதால் ரசிகர்கள் என்னப்பா இப்படி இடியைத் தூக்கிப் போட்றீங்க என்று அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
விஜய் டிவியில் ஒவ்வொரு காலத்திலும் ஒரு பாப்புலர் சீரியல் ஒளிபரப்பாகி வந்துள்ளது. தற்போது மிகவும் பாப்புலரான சீரியல் என்றால் அது பாரதி கண்ணம்மா சீரியல்தான். அது சினிமாவாக இருந்தாலும் சரி, சின்னத்திரையாக இருந்தாலும் சரி ஹீரோயின் நடிகை என்றால் அவர்கள் நல்ல சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத விதியை மாற்றி அமைத்தது பாரதி கண்ணம்மா சீரியல். கருத்த நிறத்துடன் கண்ணம்மாவை அறிமுகம் செய்து ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்க வைத்தது இந்த சீரியலின் கதைதான். அதன்பிறகே தமிழ் சீரியல்களில் இந்த போக்கு தலையெடுக்கத் தொடங்கியது.
அந்த வகையில், பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக வாழ்ந்து வருபவர் நடிகை ரோஷினி ஹரிபிரியன். ரசிகர்கள் அவரை தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே நினைக்கும் அளவுக்க்கு அவருடைய நடிப்பும் கதாபாத்திரமும் ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமானவராக இருந்து வருகிறது. டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் பாரதி கண்ணம்மா சீரியல்தான் முதலிடத்தில் இருந்து வருகிறது.
தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் சூழலில் கண்ணம்மா ரோஷினி ஹரிபிரியன் சீரியலில் விலக உள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. ரோஷினி ஹரிபிரியன் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகுவதாகவும் இன்னும் 2 வாரங்கள் மட்டுமே அவர் கண்ணம்மாவாக நடிப்பார் என்று கூறப்படுகிறது. அதற்கு பிறகு, வேறொரு நடிகை கண்ணம்மாவாக நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. ஆனால், ரோஷினி ஹரிபிரியன் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகுவது பற்றி சீரியல் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
ரோஷினி ஹரிபிரியன் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகுகிறார் என்ற தகவலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் என்னப்பா இப்படி இடியைத் தூக்கிப் போட்றீங்க என்று கவலை தெரிவித்து வருகின்றனர்.
இவ்வளவு நாள் கண்ணம்மாவாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ரோஷினியை இனிமேல் சீரியலில் பார்க்க முடியாதா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இருப்பினும், ரோஷினி பாரதி கண்ணம்மா சீரியலில் தொடர்வாரா அல்லது விலகுகிறாரா என்பது குறித்து இன்னும் 2 வாரங்களில் தெரிந்துவிடும். அதுவரை காத்திருப்போம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“