ரசிகர்கள் பெரிதும் எதிர்பாத்துக்கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 3-வது நாளை கடந்துள்ள நிலையில் போட்டியாளர்கள் உண்மை முகங்கள் தெரியவந்துள்ளது.
Advertisment
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த அக் 9-ந் தேதி தொடங்கியது. வழக்கத்திற்கு மாறாக பல புதுமுகங்கள் பங்கேற்றுள்ள இந்நிகழ்ச்சியில் டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து முதல்நாளில் இருந்தே சக போட்டியாளர்களுக்கும், நெட்டிசன்களுக்கு கண்டன்ட் கொடுக்கவும் முயற்சித்து வருகிறார். அதில் நெட்சன்கள் பலரும் அவரை ட்ரேல் செய்து வரும் நிலையில், முதல் நாளே அவருக்கான ஆர்மியும் உருவாகியுள்ளது.
இந்நிலையில், சின்னத்திரையின் ரவுடி பேபி என்று அழைக்கப்படும் சத்யா சீரியல் நாயகி ஆயிஷா பிக்பாஸ் நிகழ்ச்சியின் 20 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றுள்ளர். இதனிடையே தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில், போட்டியாளர் அசால் கோலார் உடன் நேரடியாக பேசும் காட்சியில் ஆயிஷா அசலை வாடா போடா என்று அழைத்துள்ளார்.
இதை கேட்டு கோபப்படும் அசல கோலார், தன்னை வாடா போடா என்று கூப்பிட வேண்டாம் என்று சொல்கிறார். இதை கேட்டு கஷ்டப்படும் ஆயிஷா இனிமே வாங்க போங்கனு கூப்பிடுறேன் என்று சொல்லிவிட்டு வருகிறார். அடுத்த சீனில் அவர் தனியார் அமர்ந்து அழுது கொண்டிருக்கிறார்.
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் சத்யா சீரியலில் சம்பீரமாக இருந்த ரவுடி பேபியை இப்படி முதல்நாளே அழ வச்சிட்டீங்களே என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil