/indian-express-tamil/media/media_files/2025/09/08/download-7-2025-09-08-15-22-47.jpg)
தமிழ் சினிமாவில் தற்போது பல முக்கிய வாய்ப்புகளைப் பெற்றுள்ள நடிகை ருக்மிணி வசந்த், கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்டவர். தனது சிறந்த நடிப்புத்திறனாலும் அழகும் தனித்துவமும் கொண்ட தோற்றத்தாலும், தற்போது தமிழ் சினிமாவில் பெரிய அளவில் கவனம் ஈர்த்துக் கொண்டுள்ளார்.
ருக்மிணி, 2019-ம் ஆண்டு "பிர்பால்" என்ற கன்னடப் படத்தின் மூலம் திரைப்பட உலகிற்கு அறிமுகமானார். ஆனால், அவருடைய திரையுலக பயணத்தில் மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது 2023-ல் வெளியான "சப்த சாகரதாச்சே எல்லோ" திரைப்படம். இது ஒரு ரொமான்டிக் டிராமா ஜேனரில் உருவாகி, இரண்டு பாகங்களாக வெளியானது. இந்தப் படத்தில் அவரது பரிதாபமான அழுத்தமான நடிப்பு விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் பரவலாக பாராட்டப்பட்டது. இதன் மூலம், அவர் சிறந்த கன்னட நடிகை என்ற வகையில் ஃபில்ம்ஃபேர் விருது பெற்றார். இது அவருடைய கெரியரில் மிகப்பெரிய அடையாளமாக மாறியது.
இவர் லண்டனில் உள்ள பிரபலமான 'ராயல் அகாடமி ஆப் ட்ராமாட்டிக் ஆர்ட்ஸ்' இல் நடிப்பு துறையில் பட்டம் பெற்றுள்ளார். இது அவருடைய நடிப்பிற்கு ஒரு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளது. அவரது நடிப்பில் அதன் தாக்கம் தெளிவாக தெரிகிறது – ஒரு நுணுக்கமான வெளிப்பாடும், உணர்வுகளை உணர்த்தும் திறமையும் அவரை மற்ற நடிகைகளிலிருந்து வேறுபடுத்துகிறது.
தமிழில், சமீபத்தில் வெளியான விஜய் சேதுபதி நடிப்பில் உருவான "ஏஸ்" திரைப்படத்தில் ருக்மிணி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் மூலம் தமிழ்ப்பட உலகில் அவருக்கு அறிமுகம் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, தற்போது அவர், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் "மதராஸி" எனும் பிரம்மாண்டப் படத்தில் நடித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, பான்ஃபிக்ஷன் மற்றும் ஹிஸ்டாரிக்கல் ஃபான்டஸி ஜானரில் உருவாகி வரும் 'காந்தாரா: சாப்டர் 1' திரைப்படத்திலும், "கனகாவதி" என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது இந்திய சினிமாவில் அவருடைய நடிப்புத் தளத்தை மேலும் விரிவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மணிரத்னம் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகும், காதலை மையமாகக் கொண்ட படத்திலும் ருக்மிணி வசந்த் முக்கியமான பெண் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க உள்ளார் என்பதும், ரசிகர்களிடையே இன்னும் கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இவ்வாறு, தனது திறமையாலும் பயிற்சியாலும், தென்னிந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்களின் கவனத்தை ஈர்த்து, ருக்மிணி வசந்த் இன்று தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்துப் போகும் நிலையில் உள்ளார்.
இப்போது ஒரு சமீபத்திய நேர்காணலில் பேசுகையில், "எனக்கு அடுத்ததாக ஒரு முழு லவ் ஸ்டோரி படமாக பண்ண ஆசை. ஹீரோக்களில் சூரிய சாறுடன் நடிக்க ரொம்ப ஆசை. அதற்க்கு பிறகு தனுஷ் சாறுடன் நடிக்கவும் ஆசை தான். டிராகன் படம் மாதிரி பிரதீப் ரங்கநாதன் கூடவே கூட நடிக்கலாம். அது ரொம்ப நல்ல இருக்கும்." என்று கூறியுள்ளார் அந்த நேர்காணலில்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.