திருமணம் செய்துகொண்டால் சுதந்திரத்தை இழக்கிறோம். அதனால் எனது ஆசையை தொடர முடியாமல் போகலாம் என்று பிரபல நடிகை சதா கூறியுள்ளார்.
கடந்த 2002-ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சதா. மராட்டிய மாநிலத்தை சேர்ந்த இவர், அதற்கு முன்பு ஜெயம் படத்தின் ஒரிஜினல் வர்ஷனான தெலுங்கு ஜெயம் படத்தில் நடிகர் நிதின் ஜோடியாக நடித்திருந்தார். இந்த இரு படங்களுமே அவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்த நிலையில், முதல் படத்திலேயே .ஃபிலிம்பேர் விருதை வென்றிருந்தார்.
அதன்பிறகு தமிழில், எதிரி, வர்ணஜாலம், அந்நியன், உன்னாலே உன்னாலே, திருப்பதி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். குறிப்பாக அஜித், விக்ரம், மாதவன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த சதா, 2011-ம் ஆண்டு ஆர்கே நடிப்பில் வெளியான புலிவேஷம் படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு வடிவேலு நாயகனாக நடித்த எலி படத்தில் ரீஎன்டரி கொடுத்தார்.
இந்த படம் அவருக்கு கை கொடுக்காத நிலையில், காமெடி நடிகருக்கு ஜோடியாக நடித்ததால் பட வாய்ப்பும் குறைந்தது. இதனைத் தொடர்ந்து கடன் வாங்கிய டார்ச் லைட் என்ற படத்தை தயாரித்து பாலியல் தொழிலாளியாக இந்த படத்தில் நடித்திருந்தார். இந்த படமும் அவருக்கு தோல்வியை கொடுத்த நிலையில், அடுத்து படவாய்ப்பு இல்லாமல் சதா முடங்கிபோய்விட்டார்.
தற்போது திரைத்துறைக்கு வந்து 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள சதாவுக்கு 39 வயதாகிறது. ஆனால் இன்னும் திருமணம் செய்துகொள்ளாத நிலையில், அவர் எங்கு சென்றாலும் திருமணம் குறித்து தான் கேள்வி எழுப்பி வருகிறார். தற்போது முதல்முறையாக இதற்கு பதில் அளித்துள்ள சதா, திருமணம் செய்து கொண்டால் சுதந்திரத்தை இழக்கிறோம். திருமணம் செய்பவர் புரிந்து கொள்ளலாம் அல்லது புரியாமல் இருக்கலாம்.
ஆனால் நான் வனவிலங்குகளை விரும்புகிறேன். விலங்குகளை நேசிக்கிறேன். நான் திருமணம் செய்து கொண்டால், என் ஆசைகளைத் தொடர முடியாமல் போகலாம். அதே சமயம் பல திருமணங்கள் தோல்வியில் முடிந்து பிரிந்து செல்கின்றனர். அதனால் தான் திருமணம் செய்யும் எண்ணம் இல்லை என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/