Advertisment
Presenting Partner
Desktop GIF

ஹோட்டல் பிசினஸ் நெருக்கடி: நேரலையில் கண்ணீர் விட்டு அழுத நடிகை சதா

தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி, விக்ரம், அஜீத், மாதவன் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த சதா, ஹோட்டல் பிசினஸில் ஏற்பட்ட நெருக்கடியால் நேரலையில் கண்ணீர் விட்டு அழுத வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
actress Sadha tears video, actress Sadha hotel business, நடிகை சதா ஹோட்டல் பிசினஸ் நெருக்கடி, நேரலையில் கண்ணீர் விட்டு அழுத நடிகை சதா, actress Sadha, fans shocking

நடிகை சதா

மகாராஷ்டிராவைச் சேர்ந்த நடிகை சதா 2002-ம் ஆண்டு ஜெயம் ரவி ஹீரோவாக அறிமுகமான 'ஜெயம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அப்போது அவருடைய தோற்றத்தை வைத்து, பலரும் இவர் தென்னிந்திய பெண் என்றே கூறி வந்தனர். அந்த அளவுக்கு அவருடைய தோற்றம் ஒரு தென்னிந்திய பெண் போலவே இருந்தது.

Advertisment

தமிழ் சினிமாவில் ஜெயம் படத்தை தொடர்ந்து, அந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்தபோது ஜெயம் ரவி நடித்த கதாபாத்திரத்தில் நித்தின் நடித்திருந்த நிலையில், கதாநாயகியாக சதா நடித்திருந்தார். ஜெயம் படத்தில் சிறப்பாக நடித்திருந்த ஜெயலலிதா முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருதை பெற்றார்.

'ஜெயம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து எதிரி, வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, உன்னாலே உன்னாலே, திருப்பதி, போன்ற பல படங்களில் அஜீத், விக்ரம், ஜெயம் ரவி, மாதவன் என தமிழில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். அதுமட்டுமல்ல, நடிகை சதா, தெலுங்கு, இந்தி, கன்னடம், போன்ற மொழிகளிலும் பல படங்களில் நடித்தார்.

திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்த சதா, திடீரென பட தயாரிப்பில் இறங்கினார். அவர் வங்கிக் கடன் வாங்கி 2018-ம் ஆண்டு தயாரித்து நடித்திருந்த 'டார்ச் லைட்' திரைப்படம் தோல்வி அடைந்தது இந்த படத்தில், அவர் ஒரு பாலியல் தொழிலாளியாக நடித்திருந்தார். தன்னுடைய கணவனை காப்பாற்ற பாலியல் தொழிலாளியாக மாறும் ஒரு பெண், பின்பு ஏன் கணவரையே கொலை செய்ய துணிகிறாள் என்பதை பரபரப்பான காட்சிகளுடன் படமாக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து அவருக்கு படவாய்ப்புகளும் இல்லாமல் போனது.

நடிகை சதா நீண்ட இடைவெளிக்கு பின் எலி படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்தார். 30-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள சதா, தான் சம்பாதித்த பணத்தை வைத்து மும்பையில் ஓட்டல் பிசினஸ் ஒன்றை தொடங்கினார். எர்த்லிங்ஸ் கபே என்கிற பெயரில் 4 வருடங்களுக்கு மேல் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். சதாவும் பெரும்பாலான நேரம் இந்த கபே-வில் இருக்கிறார். தன்னுடைய வியாபாரத்தை பார்த்து வந்தார்.

ஆனால், தற்போது திடீரென 'எர்த்லிங்ஸ் கபே' இயங்கி வரும் இடத்தின் உரிமையாளர். அந்த இடத்தை காலி செய்ய சொல்வதாகவும், எவ்வளவோ இந்த சூழலை மாற்ற முயற்சித்த போதும் அது முடியாமல் போய் விட்டது என கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள், சதாவுக்கு இப்படி ஒரு சூழ்நிலையா என்று ஆறுதல் தெரிவித்துவருகிறார்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment