கண்களைப் பார்த்த நொடி முதல் காதலில் விழுந்தேன் – சாய் தன்ஷிகாவின் செல்ல நாய்க்குட்டி

தண்ணீரில் மூழ்கிய அவளுடைய கண்களைப் பார்த்த நொடி முதல் அவள்மீது காதலில் விழுந்தேன். வீட்டிற்குள் ஓர் உயிரைக் கொண்டுவரும் பொறுப்பைப் பற்றி இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

Sai Dhanshika Kollywood actress tamil news
Kollywood actress Sai Dhanshika

Kollywood Tamil News: தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் வித்தியாசக் கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து, திரைத்துறையில் தனக்கான தனி இடத்தைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார் சாய் தன்ஷிகா. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறை பயணித்துக்கொண்டிருக்கும் இவருக்கு ‘கபாலி’ திரைப்படம் திருப்புமுனை என்றே சொல்லலாம்.

பெரும்பாலான பிரபலங்கள் போலவே சாய் தன்ஷிகாவிற்கும் செல்லப் பிராணி மீது கொள்ளை ஆசை. தான் வளர்க்கும் முதல் செல்ல நாய் பற்றி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் முறையாகப் பதிவிட்டிருக்கிறார். தன் செல்ல நாய்க்குட்டியுடன் புகைப்படம் எடுத்து வலைத்தளத்தில் பதிவிட்டு, தன்னுடைய பெஸ்ட்டி நாய் பற்றிய அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறார்.

Kollywood Actress Sai Dhanshika about her pet tamil news
Kollywood Actress Sai Dhanshika

அதில் “என் வாழ்க்கையில் எப்போதும் இல்லாத காதல், என் முதல் நாய் என்று உணர்ந்தேன். நான் அவளைத் தெருவிலிருந்து தூக்கிவந்த நாள் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. தண்ணீரில் மூழ்கிய அவளுடைய கண்களைப் பார்த்த நொடி முதல் அவள்மீது காதலில் விழுந்தேன். வீட்டிற்குள் ஓர் உயிரைக் கொண்டுவரும் பொறுப்பைப் பற்றி இப்போது நினைத்துப் பார்க்கிறேன். ஒட்டுமொத்த வாழ்க்கையைப் பற்றி அவள் எனக்கு எவ்வளவு கற்பித்தாள் என்பதை என்னால் விவரிக்க முடியாது!! என் பெஸ்ட்ட்டி கேட்டி, இன்று வரை உன் நினைவுகளை என் இதயத்தில் சுமந்து நேசிக்கிறேன்” என்று உருக்கமாகப் பகிர்ந்திருக்கிறார்.

Kollywood Actress Sai Dhanshika about her pet tamil news
Kollywood Actress Sai Dhanshika about her pet

விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிப்பில் தயாராகிக்கொண்டிருக்கும் ‘லாபம்’ படத்தில் தற்போது சாய் தன்ஷிகா ஓர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நீண்ட நாள் லாக் டவுனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் பிஸியாகிவிட்டார். நிச்சயம் தன் செல்ல நாய்க்குட்டி கேட்டியை மிஸ் செய்வார்!

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Actress sai dhanshika share about her first pet dog emotionally tamil news

Next Story
சமாதானம் சமாதானம்.. ஒரே நாளில் பல்ட்டி.. பிக் பாஸ் 4 விமர்சனம்Bigg Boss Tamil 4 Promo Today, Ramya Pandian, Rekha, Sanam Shetty
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com