மலர் டீச்சருக்கு பர்த்டே.... தனுஷ் கொடுத்த அந்த ஒரு சர்ப்ரைஸ்!!!

நடிகை சாய் பல்லவி மாரி 2 ஷூட்டிங் ஸ்பாட்டில்  தனது பிறந்தநாளை கேக்ஜ் வெட்டி  கொண்டாடிய புகைப்படம் சமூகவலைத்தளங்களில்  வைரலாகி வருகிறது.

சாய் பல்லவி என்ற பெயரை விட மலர் டீச்சர் என்றால் தான் பலருக்கும்  தெரியும்.  மலையாளத்தில் வெளியான  பிரேமம் படம் மூலம் நடிகையாக அறிமுகமான சாய் பல்லவி  நீண்ட கூந்தல்,  சிவப்பான பருக்கள்,  காட்டன் சேரி என்று நம்ம பக்கத்து வீட்டு பெண்  போலவே திரையில் தோன்றியதால் எல்லோர் மனதிலும் எளிதாக இடம் பிடித்தார்.

வழக்கம் போல் ரசிகர்கள், ஆஹா.. ஒஹோனு  சாய் பல்லவியை தூக்கி வைத்து கொண்டாட ஆரம்பித்தனர். வாட்ஸ் ஆப் கவர் இமேஜ், ஃபேஸ்புக் ப்ரோஃபைல் போட்டோ,  தெலுங்கு மொழி  தெரியாதவர்கள் கூட சாய் பல்லவி நடித்ததிற்காக  அந்த படங்களை மிஸ் பண்ணாமல் பார்த்த சம்பவங்கள் எல்லாம் உண்டு.

மலையாளம், தெலுங்குவை தொடர்ந்து, மலர் டீச்சர் இப்போது தமிழிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான தியா படத்தில் சாய் பல்லவியின் யதார்த்த நடிப்பு பலரையும் கவர்ந்துள்ளது.  அதனைத் தொடர்ந்து, தனுஷ் நடிப்பில் மாரி 2 படத்திலும் சாய் பல்லவி தான் ஹீரோயின்.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும்,  மாரி 2 படப்பிடிப்பில் சாய் பல்லவி தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.  நேற்றைய (10.5.18) தினம்,   சாய் பல்லவி தனது 26 ஆவது பிறந்த  நாளை  கொண்டாடினர். முதலில் ஸ்பாட்டில் இருந்த யாருக்குமே அவருக்கு பிறந்த நாள் என்று தெரியாதாம்.  அதன் பின்பு, நடிகர் தனுஷ், இயக்குனர் பாலாஜி மோகன் தான் சாய் பல்லவியின் பிறந்த நாளை கண்டுப்பிடித்து கேக் ஆர்டர் செய்துள்ளனர்.

அடுத்த கணமே, படக்குழுவினருடன் இணைந்து சாய் பல்லவி கேக்  வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்.  இந்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்திலும் அவர் பகிர்ந்துள்ளார்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close