அமரன் படத்தின் மூலம் பிரம்மாண்ட வெற்றியை பெற்ற, நடிகை சாய் பல்லவி, குறித்து பாசிட்டீவான தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வரும் நிலையில், தற்போது படம் வெற்றி பெறவில்லை என்பதால் தனது மீதி சம்பளத்தை வாங்காமல் விட்டடுள்ளார் சாய் பல்லவி என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறநது.
தமிழில் கஸ்தூரிமான், தாம் தூம் உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாக நடித்தவர் சாய் பல்லவி. 2015-ம் ஆண்டு வெளியான பிரேமம் என்ற மலையாளப்படம் சாய் பல்லவிக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த படத்தில் அவர் நடித்த மலர் கேரக்டர் கேரளா மட்டுமல்லாமல் தமிழகத்திலும் பெரும் வரவேற்பை பெற்றது.
நடிகையாக மட்டுமல்லாமல் பிரேமம் படத்தில் ஒரு நடன இயக்குனராகவும் பணியாற்றிய சாய் பல்லவி, நடனத்தில் அதீத ஈடுபாடு கொண்டதால், நடன தளத்தை எப்படி சிறப்பாக கையாள வேண்டும் என்ற வித்தை தெரிந்தவர். நடனத்தில் அவர் முறையாக பயிற்சி பெறவில்லை என்றாலும் கூட, ஒரு கைதேர்ந்த நடன கலைஞர் போல அசத்தக்கூடியவர் சாய் பல்லவி.
ஆன் ஸ்கிரீன் மற்றும் ஆஃப் ஸ்கிரீனில் அவரது நடனத்திறன் வித்தியமாக இருக்கும். தனது தாயை தனது நடன குருவாகக் கருதுவதாக முன்பு கூறிய சாய் பல்லவி, கடந்த 2008-ம் ஆண்டு விஜய் டிவியின் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியின் மூலம் முதன் முதலில் சின்னத்திரையில் தோன்றினார். சாய் பல்லவி, 2009-ம் ஆண்டு தெலுங்கில் இ.டிவியின் அன்லிமிட்டெட் டான்ஸ் ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்று கவனம் பெற்றார்.
தமிழில் தனுஷ், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள சாய் பல்லவி சமூகவலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வரும் சாய் பல்லவி, நடிப்பில் சமீபத்தில் வெளியான அமரன் படம் பெரிய வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது. தற்போது யஷ் மற்றும் ரன்பீர் கபூருடன் இணைந்து ராமாயணம் படத்தில் நடித்து வருகிறார்.
இதனிடையே கடந்த 2018-ம் ஆண்டு தெலுங்கில், ஹனு ரவகபுடி இயக்கத்தில், பாடி பாடி லெச்சே மனசு என்ற படத்தில் சாய் பல்லவி நடித்திருந்தார். சர்வானந்த் நாயகனாக நடித்திருந்த இந்த படம் கமர்ஷியலாக தோல்வியை சந்தித்தது. பாக்ஸ் ஆபீஸில் வெறும் 8 கோடி மட்டுமே இந்த படம் வசூலித்திருந்ததால், படம் தொடங்கும்போது வாங்கிய அட்வான்ஸ் பணத்தை தவிர மீதி சம்பளத்தை வாங்க சாய் பல்லவி மறுத்துள்ளார்.
இந்த வகையில் அவர் விட்டுக்கொடுத்த சம்பளம் சுமார் ரூ40 லட்சம் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், சாய் பல்லவியின் மனதை பலரும் பாராட்டி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.