சில்லுனு ஒரு காதல் காயத்ரி மாற்றம்: புதுசா வர்றவங்க செம்ம டான்ஸராம்!

சில்லுனு ஒரு காதல் சீரியலில் காயத்ர்க்கு பதிலாக புதிதாக அறிமுகமாகியுள்ள நடிகை பெரிய டான்ஸர் என்று தெரியவந்துள்ளது. அவர் தனியாக ஒரு நடனப் பள்ளியையும் நடத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி டிவி சீரியல் பார்வையாளர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ள சில்லுனு ஒரு காதல் சீரியலில் காயத்ர்க்கு பதிலாக புதிதாக அறிமுகமாகியுள்ள நடிகை பெரிய டான்ஸர் என்று தெரியவந்துள்ளது. அவர் தனியாக ஒரு நடனப் பள்ளியையும் நடத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் சீரியல்களில் கவனம் பெற்ற சீரியல்களில் ஒன்று சில்லுனு ஒரு காதல் தொடர். இந்த சீரியலில் காயத்ரியாக நடித்துவந்த நடிகைக்கு பதிலாக நடிகை சாயிரா பானு நடிக்க உள்ளார்.

நடிகை சாயிரா பானு, ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி என்ற சீரியலில் நடிகையாக அறிமுகமானார். இந்த சீரியலில் அவர் புனிதா என்ற காதாபாத்திரத்தில் நடித்தார். சாயிரா பானு நடிப்பில் மட்டுமல்லாமல் நடனத்திலும் அதிக ஈடுபாடு கொண்டவர். அவர் சொந்தமாக ஒரு நடனப் பள்ளி வைத்து நடத்தி வருகிறார்.

சாயிரா பானு தற்போது கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சில்லுனு ஒரு காதல் சீரியலில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சாயிரா பானு சில்லுனு ஒரு காதல் சீரியலில் காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இதற்கு முன்பு காயத்ரி கதாபாத்திரத்தில் நடிகை மோஹனா நடித்து வந்தார். அவர் இந்த சீரியலில் இருந்து விலகிய நிலையில், அவருடைய கதாபாத்திரத்தில் சாயிரா பானு நடிக்கத் தொடங்கியுள்ளார்.

இது குறித்து சாயிரா பானு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “என்னை சில்லுனு ஒரு காதல் சீரியலில் பார்க்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சில்லுனு ஒரு காதல் சீரியலில் இதுவரை காயத்ரி கதாபாத்திரத்தில் நடித்து வந்த மோஹனா தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியிருக்கிறார். இந்த சீரியலில் காயத்ரிக்கு ஏற்பாடு செய்த திருமணத்தில் அவர் பிரச்னை செய்ததால் மொத்த குடும்பமும் அவர் மீது கடும் கோபத்தில் இருக்கின்றன. அதனால், அவருடைய சகோதரி கயல்விழி திருமணம் செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த சூழலில்தான், சில்லுனு ஒரு காதல் சீரியலில் சீரியலில் சாயிரா பானு காயத்ரியாக நடிக்க வந்துள்ளார். நடிகை சாயிரா பானு நடிகை மட்டுமல்ல நடனத்தில் ஆர்வம் கொண்ட செம டான்சர் என்பது குறிப்பிடத் தக்கது.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Actress saira banu joins sillunu oru kaadhal serial instead to mohanas gayathri character

Next Story
திரைப்பட இயக்குனர் எஸ்.பி ஜனநாதன் மரணம்: திரையுலகினர் கண்ணீர் அஞ்சலிS. P. Jananathan passes away, Director S. P. Jananathan
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express