சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா படத்தில் அவருக்கு மருமகளாக நடித்து அனைவரையும் கவர்ந்த நடிகை சாக்ஷி அகர்வால், அண்மையில் ஒரு யாணை மீது அமர்ந்து யாணை தண்ணீரை பீய்ச்சி அடிக்க வித்தியாசமாக குளியல் போட்டுள்ளார். அந்த நிகழ்வை வீடியோவாக ஷூட் செய்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகை சாக்ஷி அகர்வால், 2018 இல் ‘ஓராயிரம் கினாக்களால்’ என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமா உலகத்திற்கு அறிமுகமானார். பின்னர், இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ படத்தில் அவருக்கு மருமகளாக நடித்து தமிழ் கோலிவுட்டில் அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து, நடிகை சாக்ஷி அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் உதவியாளராக டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்தார். சாக்ஷி அகர்வால், சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் அவர் 100-க்கும் மேற்பட்ட டிவி விளம்பரங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார்.
நடிகை சாக்ஷி இந்த ஆண்டு விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம், சாக்ஷி அகர்வால் தமிழகம் முழுவது அனைவருக்கும் தெரிந்த முகமானார்.
தற்போது நடிகை சாக்ஷி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், யானை மீது அமர்ந்து குளியல் போடும் மகிழ்ச்சியான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதனை ஆயிரக் கணக்கானோர் பார்த்து லைக் செய்துள்ளனர்.
இந்த வீடியோவில் சாக்ஷி அகர்வால், அழகிய கவர்ச்சியான உடையில் யானை மீது அமர்ந்து போட்டோ ஷூட் செய்துள்ளார். அப்போது யானை தன் மீது அமர்ந்துள்ள சாக்ஷி அகர்வால் மீது தனது தும்பிக்கையால் தண்ணீரை பீய்ச்சி அடிக்கிறது. சாக்ஷி வித்தியாசமாக யானையின் ஷவர் குளியலில் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார். வித்தியாசமாக யானை ஷவரில் குளித்த சாக்ஷிக்கு பலரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.