மொட்டை மாடி… கொட்டும் மழை… வெறித்தனமான ஒர்க் அவுட்!

நடிகை சாக்‌ஷி மொட்டை மாடியில் கொட்டும் மழையில் வொர்க் அவுட் செய்கிற வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. சாக்‌ஷி தான் ஏன் மழையில் உடற்பயிற்சி செய்தேன் என்பதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார்.

Actress Sakshi Agarwal works out in raining, Sakshi Agarwal works out in video goes viral, Sakshi Agarwal, நடிகை சாக்‌ஷி, சாக்‌ஷி மொட்டை மாடியில் கொட்டும் மழையில் வெறித்தனமான ஒர்க் அவுட், நடிகை சாக்‌ஷி வைரல் வீடியோ, நடிகை சாக்‌ஷி உடற்பயிற்சி வீடியோ, Sakshi Agarwal viral video, Sakshi Agarwal work out

சென்னையில் இரண்டு நாட்களாக கனமழை கொட்டி தீர்த்துவரும் நிலையில், மொட்டை மாடியில் கொடும் மழையில் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்த வீடியோவை நடிகை சாக்‌ஷி அகர்வால் வெளியிட்டு இன்ஸ்டாவை கலக்கியுள்ளார்.

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த நவம்பர் மாதம் சென்னையின் பல்வேறு இடங்கள் மழை வெள்ளத்தில் மிதந்தன. ஒரு மாதத்துக்கு பிறகு, மீண்டும் சென்னையில் நேற்று டிசம்பர் 30ம் தேதி முதல் இன்று 31ம் தேதி வரையிலும் சென்னையில் மழை கொட்டி தீர்த்து வருகிறது.
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில்2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், வேலைக்கு செல்பவர்களைத் தவிர பலரும் வீடுகளில் பாதுகாப்பாக உள்ளனர். ஆனால், நடிகை சாக்‌ஷி கொட்டும் மழையில் மொட்டை மாடியில் கடுமையாக உடற்பயிற்சி செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

நடிகை சாக்‌ஷி மொட்டை மாடியில் கொட்டும் மழையில் வொர்க் அவுட் செய்கிற வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. சாக்‌ஷி தான் ஏன் மழையில் உடற்பயிற்சி செய்தேன் என்பதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார்.

சாக்‌ஷி இந்த வீடியோவுக்கு இது மழை என்று தலைப்பிட்டு இது எக்ஸ்க்யூஸ் இல்லை. இது ஒரு சவால். “மழையில் கடினமாக உழைத்து உடற்பயிற்சி செய்வதால், அதிக கொழுப்பை எரிக்கவும் முடியும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. மேலும், ஆங்கில செய்தித்தாள் இணையதளத்தின் “மழையில் உடற்பயிற்சி செய்யுங்கள்” என்ற இணைப்பையும் கொடுத்துள்ளார்.

இது குறித்து நடிகை சாக்‌ஷி கூறுகையில், “மழையில் வொர்க் அவுட் செய்வது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. அது என் மன அழுத்தத்தை நீக்கியது. உடற்பயிற்சிக்குப் பிறகு அது எனக்கு ஒரு புதிய உணர்வைக் கொடுத்தது. அது நம் உடலை நகர்த்துவதற்கு அதிக ஆற்றலைப் பயன்படுத்துவதால் அதிக கலோரிகள் மற்றும் கொழுப்பை எரிக்க உதவுகிறது. நீங்கள் இன்னும் நெகிழ்வாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க வேண்டும். மழையில் உடற்பயிற்சி செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். மழையில் சறுக்க வாய்ப்பு உள்ளது. எனவே, கால்களை வலுவாக அழுத்தி நிற்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

மழையில் வொர்க் அவுட் செய்தால் சளி பிடிக்காதா? என்ற கேள்வி க்கு பதிலளித்துள்ள நடிகை சாக்‌ஷி, “நடிகர்களாகிய எங்களைப் பொறுத்தவரை, நாங்கள் கடுமையான சூழ்நிலையில் வேலை செய்கிறோம். அது உண்மையில் எனக்கு ஒரு பிரச்சனையல்ல. நான் இப்போது வரை நன்றாக இருக்கிறேன். ஆனால், குழந்தைகளாகிய நாம் பலமுறை மழையில் விளையாடியிருக்கிறோம். ஆனால், எப்போதாவது ஒரு முறைதான் செய்ய வேண்டும்” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Actress sakshi agarwal works out in raining video goes viral

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express