Advertisment

ஹேமா கமிட்டி அறிக்கை எதிரொலி: தெலங்கானா அரசை வலியுறுத்தும் சமந்தா: மாற்றம் வருமா?

கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகை சமந்தா தெலுங்கானா அரனை வலியுறுத்தி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
samantha proposal

ஹேமா கமிட்டி தாக்கல் செய்த அறிவிப்பு வெளியானதில் இருந்து மலையாள சினிமாவில் பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகள், அதிகமாக இருந்து வரும் நிலையில, தெலுங்கானாவில் துணை கமிட்டி கொடுத்த அறிக்கையை வெளியிட வேண்டும் என்று அம்மாநில அரசை நடிகை சமந்தா வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

மலையாள சினிமாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும், வன்கொடுமைகள், மற்றும் பாலியல் தொடர்பான பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக கேரளா அரசு அமைத்த ஹேமா கமிட்டி கடந்த 2019ம் ஆண்டு தங்களது அறிக்கையை தாக்கல் செய்த நிலையில், இந்த அறிக்கை 5 வருட இடைவெளிக்கு பின் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை வெளியானது முதல் மலையாள சினிமாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், நடிகர் ரஞ்சித் மற்றும் சித்திக் ஆகியோர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் பல உச்ச நடிகர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், மலையாள சினிமா நடிகர்கள் சங்கமான அம்மா சங்கத்தில் இருந்த தலைவர் மோகன்லால் உட்பட முக்கிய நிர்வாகிகள் பலரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் பரபரப்பும் அதிகரித்துள்ளது.

இதனிடையே கேரளாவில் (விமன் இன் சினிமா கலெக்டிவ்(WCC) ஹேமா கமிட்டி ஆய்வு செய்ததை பாராட்டியுள்ள நடிகை சமந்தா, தெலுங்கானாவில், துணை கமிட்டி தாக்கல் செய்த அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என்று நடிகை சமந்தா வலியுறுத்தியுள்ளார். கேரளாவில், விமன் இன் சினிமா கலெக்டிவ் இருப்பது போல், தெலுங்கு சினிமாவில் உள்ள பெண்களுக்கான ஆதரவு குழுவாக, தி வாய்ஸ் ஆஃப் வுமன் (TFI) கடந்த 2019-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

இந்த துணை குழு தாக்கல் செய்த அறிக்கையை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், தி வாய்ஸ் ஆஃப் வுமன் (TFI) பெண்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழலை உருவாக்க, அரசாங்கம் மற்றும் தொழில்துறை கொள்கைகளை வடிவமைக்கவும், திரையுலகில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல் குறித்த சமர்ப்பிக்கப்பட்ட துணைக் குழு அறிக்கையை வெளியிடுமாறு தெலுங்கானா அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், தெலுங்கு திரையுலகப் பெண்களான நாங்கள், ஹேமா கமிட்டியின் அறிக்கையை வரவேற்கிறோம் மற்றும் கேரளாவில் விமன் இன் சினிமா கலெக்டிவ்(WCC) -ன் தொடர்ச்சியான முயற்சிகளைப் பாராட்டுகிறோம், இது இந்த தருணத்திற்கான பாதையை அமைத்துள்ளது, விமன் இன் சினிமா கலெக்டிவ்(WCC)-ன் இடைவிடாத முயற்சிகள் பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் சமமான பணிச்சூழலுக்கான நிலை உருவாக உதவும் என்று தனது ஆதரவைத் தெரிவித்தார்.

பல வருடங்களாக, கேரளாவில் உள்ள விமன் இன் சினிமா கலெக்டிவ் (WCC) இன் நம்பமுடியாத வேலையை நான் பின்பற்றி வருகிறேன். அவர்களின் பயணம் எதுவாக இருந்தாலும் அது எளிதானது அல்ல. இப்போது, ஹேமா கமிட்டி அறிக்கை கேரளா சினிமாவில் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதால், விமன் இன் சினிமா கலெக்டிவ்(WCC)-க்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம்,” என்று சமந்தா கூறியுள்ளார்.

மலையாளத் திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்த ஹேமா கமிட்டி அறிக்கை, கேரள அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில்,இந்த அறிக்கையின் பின்னணியில், பல பெண்களின் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது மலையாள திரையுலகத்தை உலுக்கியுள்ளது. முன்னணி நடிகர்கள் பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே விமன் இன் சினிமா கலெக்டிவ்(WCC)-ன் இந்த முயற்சிக்கு சமந்தாவைத் தவிர, பிரபல நடிகர்கள் குஷ்பு மற்றும் ஸ்வாரா பாஸ்கர் ஆகியோர் திரைப்படத் துறையில் பெண்கள் பாதுகாப்பின் அவசியத்தை வெளிப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Samantha Ruth Prabhu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment