scorecardresearch

ஹைதராபாத்தில் 13-வது தளத்தில் வீடு வாங்கிய சமந்தா: விலை இத்தனை கோடியா?

நடிகை சமந்தா விவாகரத்திற்குப் பிறகு, ஜுப்லி ஹில்ஸ் ஹவுஸிலேயே வசித்துவந்த நிலையில், தற்போது அவர் ஹைதராபாத்தில் 13-வது தளத்தில் புதிய வீடு வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Actress Samantha, Samantha ruth prabhu bought new house at 13 floor at seashore in Hyderabad, Samantha, கடற்கரையை ஒட்டி 13-வது தளத்தில் வீடு வாங்கிய சமந்தா, சமந்தா வாங்கிய புது வீடு விலை இத்தனை கோடியா, Actress Samantha bought new house for crores
நடிகை சமந்தா

நடிகை சமந்தா விவாகரத்திற்குப் பிறகு, ஜுப்லி ஹில்ஸ் ஹவுஸிலேயே வசித்துவந்த நிலையில், தற்போது அவர் ஹைதராபாத்தில் ஒட்டி 13-வது தளத்தில் புதிய வீடு வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை சமந்தா தற்போது ‘சிட்டாடல்’ வெப் சீரிஸ் மூலம் இந்திய அளவில் கவனத்தைப் பெற்றுள்ளார்.

சமந்தா தற்போது நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ‘குஷி’ திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியாக உள்ளது.

நடிகை சமந்தா, தெலுங்கு சினிமா நடிகர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு, அவர் முன்பு வசித்துவந்த ஜுப்லி ஹில்ஸ் ஹவுஸிலேயே இப்போதும் வசித்து வருகிறார். இந்த வீட்டின் மதிப்பு சுமார் ரூ.100 கோடி என்று கூறப்படுகிறது. இந்த வீட்டை நடிகர் நாகசைதன்யா மற்றும் நடிகை சமந்தா இருவரும் சேர்ந்து வாங்கியதாகவும் இதில் சமந்தா அதிக அளவில் பணம் செலவிட்டதாகவும் கூறப்படுகிறது.

நடிகை சமந்தா விவாகரத்திற்குப் பிறகும், ஜுப்லி ஹில்ஸ் வீட்டிலேயே வசித்துவருகிறார். சமந்தாவிடம் இந்த வீடு ஒப்படைக்கப்பட்டது குறித்த முழுமையான தகவல் எதுவும் வெளிவராத நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமந்தா மும்பையில் ரூ.15 கோடி மதிப்பிலான அப்பார்ட்மெண்ட் வீடு ஒன்றை வாங்கியதாக தகவல் வெளியானது.

அதேபோல, விவாகரத்திற்குப் பிறகு நடிகர் நாகசைதன்யாவும் தனது பெற்றோர் வசித்துவரும் அதே ஜுப்லி ஹில்ஸ் பகுதியில் சொகுசு அப்பார்ட்மெண்ட் ஒன்றை வாங்கியுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், நடிகை சமந்தா தற்போது ஹைதராபாத்தில் உள்ள ஜெயபேரி ஆரஞ்ச் கவுண்டி பகுதியில் 6 ஸ்லாட்டுகளுடன் கூடிய 3 படுக்கறை கொண்ட புதிய வீட்டை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ரூ.7.8 கோடி மதிப்புள்ள இந்த வீடு 7,944 சதுர அடியுடன் 13-வது தளத்தில் அமைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஜுப்லி ஹில்ஸ் பகுதியில் வசித்துவரும் நடிகை சமந்தா திடீரென வெறொரு பகுதியில் புதிய வீட்டை வாங்கியிருப்பது குறித்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actress samantha bought new house at 13 floor at seashore in hyderabad