scorecardresearch

படுக்கையறை… லிப்லாக் காட்சிகள் : வெற்றிக்காக க்ளாமர் ரூட்டில் சமந்தா?

விஜய் தேவரகொண்டாவுடன் குஷி என்ற படத்தில் நடித்து வரும் சமந்தா சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார்.

Samantha
சமந்தா

நடிகை சமந்தா தொடர் தோல்வியில் இருந்து மீண்டு வருவதற்காக படுக்கையறை மற்றும் லிப்லாக் காட்களில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா சமீப காலமாக ஒரு பெரிய ஹிட் படத்தை கொடுத்துவிட வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளார். ஆனால் அவரது படங்கள் அனைத்தும் தோல்வியை சந்தித்து வருகிறது. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான யசோதா மற்றும் சகுந்தலாம் ஆகிய இரண்டு படங்களும் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம் என்றாலும் சமந்தாவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை.

தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் குஷி என்ற படத்தில் நடித்து வரும் சமந்தா சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். ஹாலிவுட்டில் பிரபலமான வெப் தொடர்களில் ஒன்றாக சிட்டாடல் தொடரில் பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார். வாரந்தோறும் வெள்ளிக்கிழமை புதிய எபிசோடுகள் வெளியாகும் இந்த தொடரில் படுக்கையறை மற்றும் லிப்லாக் காட்சிகள் அதிகம் உள்ளது

இந்த தொடர் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. தி ஃ.பேமிலிமேன் தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டிகே இயக்கி வருகின்றனர். இந்த தொடரில் பிரியங்கா சோப்ரா நடித்த வேடத்தில் சமந்தா நடித்து வரும் நிலையில் நாயகனாக வருண் தவான் நடித்து வருகிறார். அதேபோல் ஒரிஜினல் தொடரில் இருப்பது போல் இந்த தொடரிலும் படுக்கையறை மற்றும் லிப்லாக் காட்சிகள் இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர் தோல்வியில் இருந்து மீண்டு வருவதற்காக நடிகை சமந்தா இப்படி இறங்கிவிட்டாரா என்ற கேள்வி எழுந்து வரும் நிலையில், புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடமாடியதே சமந்தாவின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actress samantha change her rote bedroom and lip lock scene