New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/07/ie-cropped-Samantha-Ruth-4-1.jpg)
நடிகை சமந்தா
நடிகை சமந்தா
நள்ளிரவு இரவு 11 மணிக்கு நடிகை சமந்தா உடன் ஒரு பிரபலத்தின் வாட்ஸ்அப் அரட்டையின் ஸ்கிரீன்ஷாட் சமூக வலைதளங்களில் தற்போது தீயாக பரவி வருகிறது.
காதல் கணவர் நாக சைதன்யாவிடமிருந்து விவாகரத்து பெற்ற சமந்தா மீண்டும் படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார். விவாகரத்துக்குப் பிறகு அவர் நடிப்பில் வெளியான ‘யசோதா’ படம் மிகப்பெரியஹிட் ஆனது.
இதையடுத்து அடுத்தடுத்து படங்களில் நடிக்க வாய்ப்பு வரத் தொடங்கியது. அப்போது, சமந்தாவுக்கு கடும் உடல் வலி ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் அவரால் எழுந்து நிற்கக்கூட முடியவில்லை, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், மயோசிடிஸ் பிரச்னை இருப்பதைக் கண்டுபிடித்தார்கள்.
இதைத் தொடர்ந்து அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் ஆறுதல் கூறினர். அவர் இந்தியாவில் மயோசிடிஸ் சிகிச்சை பெற்றார். எனினும் பிரச்னை தீரவில்லை
இதனால், அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று குணமடைந்து இந்தியா திரும்பினார். தொடர்ந்து, ஏற்கனவே சீடாள் வெப் சீரிஸ், குஷி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள சமந்தா, மயோசிடிஸ் பாதிப்பில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை.
இந்நிலையில் அவருக்கு பாலிவுட் மற்றும் ஹாலிவுட் பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்து வருவதாக கூறப்படுகிறது. நோயின் தாக்கம் இருந்தாலும், தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள, முடிந்தவரை உடற் பயிற்சி செய்து வரும் சமந்தா, ஜிம் டிரெய்னருடன் வாட்ஸ்அப் சாட் செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்த ஸ்கிரீன்ஷாட்டில், சமந்தா தனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், இன்று ஓய்வு தேவை என்றும் கூறுகிறார். இதற்கு சமந்தாவின் ஜிம் ட்ரெய்னர் லீவு கொடுக்காமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறார்.
இந்த வாட்ஸ்அப் உரையாடல் சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. நடிகை சமந்தா, தமிழ், தெலுங்கு என தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ஆவார். இவர் தற்போது பல துணிச்சலான வேடங்களில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.