/tamil-ie/media/media_files/uploads/2022/07/Samanth.jpg)
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக சமந்தா தற்போது தெலுங்கில் சகுந்தலம், யசோதா, குஷி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் சமீபத்தில் இவர் நடிப்பில் தமிழில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
படங்களில் பிஸியாக நடித்து வரும் சமந்தா தற்போது பிரபல பாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தொகுத்து வழங்கி வரும் காஃபி வித் கரண் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இவருடன் சேர்ந்து பிரபல பாலிவுட் நடிகரான அக்ஷைகுமார் பங்கேற்றுள்ளார்.
இந்த நிகழ்ச்சி வரும் ஜூலை 21-ந் தேதி ஒளிபரப்பாக உள்ள நிலையில், இந்த நிகழ்ச்சிக்கான ப்ரமோவை தொகுப்பாளர் கரண ஜோஹர் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த ப்ரமோவில், சமந்தாவை அலேக்காக தூக்கி வரும் நடிகர் அக்ஷைகுமாரை, நம்பர் ஒன் ஹீரோயினை நம்பர் ஒன் நடிகர் தோளில் சுமந்து வருகிறீர்கள் என்று கேட்கிறார் கரண் ஜோஹர்.
அதற்கு நான் குறை சொல்லவில்லை என்று பதில் அளிக்கும் சமந்தா, திருமண வாழ்க்கை சந்தோஷமாக இல்லாமல் போவதற்கு நீங்கள் தான் காரணம் என்று கரண் ஜோஹரை பார்த்து சொல்கிறார். அதன்பிறகு கரண் ஜோஹர் கேட்ட கேள்விக்கு சமந்தா அக்ஷை குமார் இருவரும் பதில் அளிக்கின்றனர்.
Heart of gold and a dash of sexy & bold - my two new guests on the Koffee couch are bringing the heat this Thursday in an all new episode of #HotstarSpecials#KoffeeWithKaran S7 only on Disney+ Hotstar.@DisneyPlusHS@akshaykumar@Samanthaprabhu2@apoorvamehta18pic.twitter.com/i0tpm9l2K6
— Karan Johar (@karanjohar) July 19, 2022
அதன்பிறகு இருவரும் ஜாலியாக நடனமாடுகின்றனர். தான் தன் காதல் கணவரான நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்த சமந்தா இதுவரை அது குறித்து எங்கும் பேசாத நிலையில், தற்போது முதல்முறையாக மனம் திறந்து பேசியிருக்கிறார்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.