தோல் அலர்ஜி நோயால் சிகிக்சை பெற்று தற்போது குணமடைந்து வரும் நடிகை சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இது குறித்து சமந்தா தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் தான் அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டு தற்போது அதற்காக சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார். மேலும் முழுவதும் குணமடைந்த பின் இதை தெரிவிக்கலாம் என்று இருந்தேன். ஆனால் குணமடைய கூடுதல் நாட்கள் ஆகும் என்று தெரிகிறது. அதனால் இப்போது சொல்கிறேன்.
இந்த பாதிப்பை ஏற்றுக்கொள்ள நான் போராடி வருகிறேன். விரைவில் பூரண குணமடைவேன் என்று மருத்துவர்கள் நம்பிக்கை அளித்துள்ளனர். உங்களை நேசிக்கிறேன் இதுவும் கடந்து போகும் என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் பலரும் அவர் விரைவில் குணமடைய வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
தொடர்ந்து நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு யசோதா திரைப்படம் வெளியானஇந்த படத்திற்கான ப்ரமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வரும் நிலையில், யசோதா படம் தொடர்பாக டி.வி. நேர்ணால் ஒன்றில் பங்கேற்ற நடிகை சமந்தா தான் இன்னும் இறக்கவில்லை எதுவாக இருந்தாலும் எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.
இதனிடையே சமந்தா உடல்நிலை சரியில்லாத நிலையில் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. தற்போது இது குறித்து விளக்கம் அளித்த சமந்தா தரப்பு, இந்த தகவல் உண்மையில்லை என்றும், சமந்தா தற்போது தனது ஐதரபாத் இல்லத்தில் ஓய்வு எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil