பிரபல பாடகி குழந்தையுடன் சமந்தா: நவராத்திரி கொண்டாட்டத்தில் இதுவும் ஒன்று; வைரல் வீடியோ!

சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள பாடகி சின்மயி ஸ்ரீபாதாவின் வீட்டில் நடந்த நவராத்திரி கொண்டாட்டங்களில் பங்கேற்றிருந்தார்.

சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள பாடகி சின்மயி ஸ்ரீபாதாவின் வீட்டில் நடந்த நவராத்திரி கொண்டாட்டங்களில் பங்கேற்றிருந்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
samanta ruth prab

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா தற்போது பாடகி சின்மயி குழந்தையுடன் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள பாடகி சின்மயி ஸ்ரீபாதாவின் வீட்டில் நடந்த நவராத்திரி கொண்டாட்டங்களில் பங்கேற்றிருந்தார். அங்கிருந்து பாடகி சின்மயின் குழந்தையுடன் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு அழகான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதனைத் தொடர்ந்து வெளியிட்டிருந்த ஒரு வீடியோவில், சமந்தா சின்மயின் குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருக்கிறார். குழந்தையிடம் தனது பெற்றோரை மறக்க வைக்கும் வகையில் சமாதானம் செய்கிறார்.

சமந்தா தனது இன்ஸ்டாகிராம் கதைகளில் பகிர்ந்துள்ள வீடியோவில், அவர் சின்மயியின் மகளை இடுப்பில் வைத்துக்கொண்டு தன்னுடன் வரும்படி சமாதானப்படுத்தினார். அதன்பிறகு, சின்மயி மற்றும் அவரது கணவர் ராகுல் ரவீந்திரனிடம் இருந்து விடைபெற்ற சமந்தா "சராசரி மக்களுக்கு பை, நாங்கள் செல்கிறோம்" என்று குறிப்பிட்டு, குழந்தையும் அவரை போலவே மிமிக்ரி செய்து, அவரது பெற்றோரிடம் விடைபெற்றது. சமந்தா குழந்தையுடன் ஜாலியாக விளையாடுவது போல் தோன்றினார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்,“ குழந்தை அவளுடைய பெற்றோரை விட்டு வருவதற்க 4.5 வினாடிகள் ஆனது; நான் இதனை ஒப்புக்கொள்கிறேன் (பிசாசு ஈமோஜி) என்று ஒரு இதயம் கலந்த எமோஜியுடன் பதிவிட்டுள்ளார். பாடகி சின்மயி ஸ்ரீபாதா மற்றும் அவரது கணவர் ராகுல் ரவீந்திரன் தம்பதி கடந்த 2022ம் ஆண்டு இரட்டை குழந்தைகளக்கு இவர்களுக்கு த்ரிபா மற்றும் ஷர்வாஸ் என்று ஒர ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது.

Advertisment
Advertisements

இந்நிலையில், சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த ஆலியா பட்டின் ‘ஜிக்ரா’ படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் சமந்தா கலந்து கொண்டார். இந்த நிகழ்வின் போது, சமந்தா தான் பார்த்த வலிமையான பெண் என்று ஆலியா பாராட்டினார் மற்றும் அவரது நெகிழ்ச்சித்தன்மையை ஒப்புக்கொண்டார். அதே நேரத்தில், இந்த விழாவில் விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைப் போலவே சமந்தாவுக்கும் நாட்டில் பலமான ரசிகர்கள் இருப்பதாகக் குறிப்பிட்டார். சமந்தா தற்போது வருண் தவானுடன் இணைந்து தனது வரவிருக்கும் அதிரடித் தொடரான 'சிட்டாடல்: ஹனி பன்னி' வெளியீட்டிற்கு தயாராகி வருகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Samantha Ruth Prabhu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: