கோலிவுட் டோலிவுட் என கலக்கும் நடிகை சமந்தாவிடம் சமூக ஊடகத்தில் ஒரு ரசிகர், நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்று கேட்டதற்கு, ஆமாம் நான் கர்ப்பமாகத்தான் இருக்கிறேன். ஆனால், எப்போது இருந்து தெரியுமா என்று வேடிக்கையாக பதில் கூறி அதிரடித்திருக்கிறார்.
நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அவர்கள் திருமணம் செய்து கொண்ட நாள் முதல் சமூக ஊடகங்களில் ரசிகர்கள் சமந்தா கர்ப்பமாக இருப்பதாகக் கூறி வதந்தியைக் கிளப்பி வருகின்றனர். இது எல்லாமே ரசிகர்கள் நடிகை, நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் நடைபெறுவதுதான். இந்த ஆர்வம் ரசிகர்களின் ஒரு பொதுவான இயல்பாக இருக்கிறது. ஆனால், இது சம்பந்தப்பட்ட நடிகைகள், நடிகர்களுக்கு தனிப்பட்ட முறையில் எரிச்சலாக இருக்கத்தான் செய்யும்.
அந்த வகையில், ரசிகர்கள் பலரும் நடிகை சமந்தா கர்ப்பமாக இருப்பதாக சமூக ஊடகங்களில் வதந்திகளை கிளப்பிவிடுவது வழக்கமாக இருந்து வருகிறது.
நடிகை சமந்தா இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் கோலிவுட்டிலும் டோலிவுட்டிலும் நல்ல படங்களில் நடித்து கலக்கி வருகிறார். நடிகை சமந்தா, தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டு இயக்குனர் தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில், சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்தார். இந்த படத்தில் சமந்தா வேடிக்கையாக ஜாலியாக நடித்தது ரசிகர்கள் மத்தியில் பெரிது வரவேற்பை பெற்றது.
இதனைத் தொடர்ந்து, தமிழில் விஜய் சேதுபதி, திரிஷா நடித்து வெற்றி பெற்ற 96 படம் தெலுங்கில் ஜானு என்ற பெயரில் வெளியானது. இந்த படத்தில் திரிஷா நடித்த பாத்திரத்தில் சமந்தா நடித்திருந்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.
இந்த கொரோனா வைரஸ் பொதுமுடக்க காலத்தில் நடிகை சமந்தா சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார். அவ்வப்போது சமூக ஊடகங்களில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். ரசிகர்களின் கேள்விகும் பதிலளித்து வருகிறார்.
அந்த வகையில், சமூக ஊடகத்தில் ரசிகர் ஒருவர் சமந்தாவிடம் நீங்கள் கர்ப்பமாக இருப்பதாகக் கூறுகிறார்களே உண்மையா என்று கேட்க, அதற்கு சமந்தா, “ஆமாம், நான் கர்ப்பமாகத்தான் இருக்கிறேன். ஆனால், எப்போது இருந்து தெரியுமா? 2017ம் ஆண்டில் இருந்து கர்ப்பமாக இருக்கிறேன். ஆனால், குழந்தைதான் வெளியே வரமாட்டேங்கிறது” என்று வேடிக்கையாக கூறி ரசிகரை அதிரடித்திருக்கிறார்.
சமந்தாவின் இந்த பதிலுக்குப் பிறகு, அவரிடம் ரசிகர்கள் யாருக்கும் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்று கேட்க துணிவு இருக்க வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது.