/indian-express-tamil/media/media_files/qKqysLDGvYODGrZo1YMK.jpg)
நடிகை சமந்தா
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, புஷ்பா படத்தில் நடனம் ஆடிய “ஊ சொல்றியா மாமா” பாடல் சூப்பர் ஹிட்டான நிலையில், அந்த பாடலுக்கு நடனம் ஆட வந்த வாய்ப்பு குறித்தும் தனது விவாகரத்து குறித்தும் நடிகை சமந்தா மனம் திறந்து பேசியுள்ளார்.
சில வருடங்களுக்கு முன்பு தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். அந்த நேரத்தில்தான், ‘புஷ்பா’ திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படம் ரூ. 400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் ஆகியோர் நடித்த, ‘புஷ்பா’ திரைப்படம் அனைத்து மொழிகளிலும் வெளியாகி ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்ல, புஷ்பா படத்தில் இடம்பெற்ற, “ஊ சொல்றியா மாமா” பாடல் ரசிகர்களிடம் கொண்டாட்டமாக மாறியது. எல்லா மொழிகளிலும் “ஊ சொல்றியா மாமா” பிரபலமானது. படத்தில் இந்த பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடி இருந்தார். சமந்தாவின் நடனம் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், “ஊ சொல்றியா மாமா” பாடல் சூப்பர் ஹிட்டான நிலையில், அந்த பாடலுக்கு நடனம் ஆட வந்த வாய்ப்பு குறித்தும் தனது விவாகரத்து குறித்தும் நடிகை சமந்தா மனம் திறந்து பேசியுள்ளார்.
நடிகை சமந்தா கூறியிருப்பதாவது: “ஊ சொல்ரியா பாடல் என்னிடம் வந்தபோது என் குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என எல்லோரும் இதில் நடிக்க வேண்டாம் என்று கூறினர். ஏனென்றால், அது நான் விவாகரத்தை அறிவித்த சமயம். நான் ஏன் அதை மறுக்க வேண்டும். நான் எந்த தவறும் செய்யவில்லை. திருமண வாழ்க்கையில் என் 100 சதவிகிதத்தை கொடுத்தேன் ஆனால், அது பயனளிக்கவில்லை. விவாகரத்தையும் ஊ சொல்ரியா பாடலில் நடிப்பதையும் நான் ஏன் சம்பந்தப்படுத்த வேண்டும்.” என்று சமந்தா மனம் திறந்து பேசியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.