Actress samantha ruth prabhu tamil news: தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா ரூத் பிரபு. தனது தனித்வதுமான நடிப்பால் தனக்கென ரசிகர்களை உருவாக்கியுள்ள இவர், பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர் நடித்த சில படங்கள் வசூல் சாதனையும் படைத்துள்ளது.

திருமணம் – விவாகரத்து

நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து வந்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு இருவரும் இரு வீட்டார் ஒப்புதலுடன் திருமணம் செய்து கொண்டார்கள். 4 ஆண்டுகளாக நீடித்து வந்த இவர்களது திருமண உறவு, அண்மையில் முடிவுக்கு வந்தது. இது ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
புதிய பயணம்
எனினும், தனது நடிப்பை கைவிடாத நடிகை சமந்தா கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவர் நடிப்பில் வெளிவந்த ஃபேமிலி மேன் 2 வெப் தொடர் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதில் சமந்தாவின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

இதையடுத்து சமந்தா சில இந்திய படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும், அவர் பிரபல ஹாலிவுட் இயக்குனர் பிலிப் ஜான் இயக்கும் “அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆப் லவ்” படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். இதில் யாரும் எதிர்பாராத மிகவும் துணிச்சலான கதாபாத்திரத்தில் அவர் நடிக்க உள்ளார்.

ஊ சொல்லுறிய பாடல் சர்ச்சை
இந்த நிலையில் தான், நடிகை சமந்தா தன்னுடைய திரை வாழ்க்கையில் முதன் முறையாக ஐட்டம் பாடலான ‘ஊ சொல்லுறிய…’ பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். தெலங்கு சினிமாவின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகிய புஷ்பா படத்தில் இடம் பெற்றுள்ள இந்த பாடல், பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது.
இப்பாடலின் வரிகள் ஆண்களைக் கொச்சைப்படுத்துவதாகக் கூறி ஆண்கள் அமைப்பு ஒன்று ஆந்திர ஐகோர்ட்டில், பாடலைத் தடை செய்யக் கோரி வழக்கு தொடர்ந்தது.
எனினும், இந்த பாடல் திரையரங்குகளில் பெரும் வரவேற்பை பெற்ற ஒன்றாகவே இருந்தது. இந்த ஒரு பாடலில் ஆட நடிகை சமந்தாவிற்கு ரூ.1.30 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

சமந்தா கொடுத்த விளக்கம்
இந்நிலையில், இந்த பாடலில் ஆடியது குறித்து தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்த சமந்தா, “நான் நல்லவளாக நடித்திருக்கிறேன், கெட்டவளாக நடித்திருக்கிறேன், ஜாலியாகவும் நடித்திருக்கிறேன், நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாகவும் இருந்திருக்கிறேன். நான் எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு முயற்சியிலும் என்னுடைய கடின உழைப்பை போட்டிருக்கிறேன். ஆனால், செக்ஸியாக இருப்பது அடுத்தகட்ட கடினமான உழைப்பு. உங்கள் அன்பிற்கு நன்றி’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

வைரலாகும் ரிகர்சல் வீடியோ
இந்த நிலையில், இப்பாடலுக்காக நடிகை சமந்தா ரிகர்சல் செய்த போது எடுக்கப்பட்ட வீடியோ அதிகம் பகிரப்பட்டு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிறது.

முன்னதாக பேட்டி ஒன்றில் பங்கேற்ற சமந்தாவிடம், இந்த பாடலில் நடமான ஒத்துக்கொண்ட காரணம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சமந்தா ‘இது மிகவும் சவாலாக அளித்தது என்று கூறியிருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“