scorecardresearch

‘தோனி ராஞ்சி ஆள் இல்லை; சென்னைக்காரர்’: பெரிய விசில் அடித்த சமந்தா- வீடியோ

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விசில் அடிங்க… நம்ம தல தோனிக்கு பெரிய விசில் அடிங்க என்ற பாடலை பாடினார் சமந்தா

Dhoni Samantha
தோனி – சமந்தா

சிஎஸ்கே கேப்டன் தோனி ராஞ்சியை சேர்ந்தவர் என்பதை நம்பவே முடியவில்லை என்று நடிகை சமந்தா கூறியுள்ளார்.

கிரிக்கெட் உலகின் முன்னணி வீரராக திகழ்ந்தவர் தோனி. கேப்டன் கூல் என்று அழைக்கப்படும் இவர் ஐசிசி நடத்தும் 3 வகையாக கோப்பைகளையும் வென்ற முதல் கேப்டன் என்ற பெருமை பெற்றுள்ளார். இந்தியாவுக்காக உலககோப்பையை வென்ற தோனி கேப்டனாகவும் முத்திரை பதித்துள்ளார்.

தற்போது சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள தோனி ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். தோனி ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியை சேர்ந்தவர் என்றாலும் கூட அவர் சென்னை வாசியாகவே மாறிவிட்டார். மேலும் அவர் சென்னை தனது 2-வது வீடு என்று பலமுறை கூறியுள்ளார்.

இந்நிலையில், கேப்டன் தோனி ராஞ்சியை சேர்ந்தவர் என்பதையும் நம்ப முடியவில்லை, அதே சமயம் அவர் சென்னையை சேர்ந்தவராக இருப்பாரோ என்ற சந்தேகமும் இருக்கிறது என்று நடிகை சமந்தா கூறியுள்ளார். தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் நடித்துள்ள குஷி படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்த படம் குறித்து சமீபத்தில் பேட்டி அளித்த சமந்தா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விசில் அடிங்க… நம்ம தல தோனிக்கு பெரிய விசில் அடிங்க என்ற பாடலை பாடி தோனிக்காக விசிலும் அடித்தார். அதன்பிறகு பேசிய அவர் தோனியை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் ராஞ்சியா? அல்லது சென்னையா என்பது குறித்து எனக்கு பலமுறை சந்தேகம் எழுந்துள்ளது. அந்த அளவுக்கு சென்னை மக்களோடு ஒன்றிவிட்டார் என்று கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actress samantha said csk captain dhoni in kushi movie press meet