”ஷூட்டிங் முடித்து விட்டு எப்போது வீடு போய் சேருவேன் என்று இருக்கும்” :அச்சு அசல் குடும்ப பெண்ணாக மாறிய சமந்தா!

கணவருக்கு கால் செய்து பேசுவது, சமைப்பது குறித்து பேசுவது என ஃப்ர்ஃபேட் ஹோம் மேக்கராக மாறியுள்ளாராம்.

By: March 24, 2018, 5:24:11 PM

திருமணத்திற்கு பின்பு மீண்டும் நடிக்க வந்துள்ள நடிகை சமந்தா, ஷூட்டிங் ஸ்பாட்டிலும் வீடு மற்றும் கணவர் குறித்த ஞாபகத்துடனே இருப்பதைக் கண்டும் பலரும் ஆச்சரியத்துள்ளனர்.

கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் மிகவும் பிஸியான நடிகையாக இருந்தவர் தான் நடிகை சமந்தா.  ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த இவர், கடந்த ஆண்டு,  நடிகர் நாகார்ஜூனின் மகனான நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

கோவாவில் கோலாகலமாக நடைப்பெற்ற இவர்களது திருமணம் பலரையும் பொறாமை படவைத்தது. இந்நிலையில், ஒரு சின்ன இடைவெளிக்கு பிறகு சமந்தா மீண்டும் நடிக்க வந்துள்ளார். திருமணத்திற்கு முன்பே தனது ரசிகர்களிடம் கட்டாயமாக திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் நடிப்பேன் என்றார். அதைப் போலவே தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டிலும் சமந்தா எப்போதும்  தனது குடும்பம்  மற்றும் காதல் கணவர் குறித்த ஞாபகத்துடனே இருப்பதைக் கண்டு பலரும் ஆச்சரியப்பட்டுள்ளனர். இடைவெளி கிடைத்த உடனே கணவருக்கு கால் செய்து பேசுவது,  சமைப்பது குறித்து பேசுவது என ஃப்ர்ஃபேட் ஹோம் மேக்கராக மாறியுள்ளாராம்.

இதுப்பற்றி அவரிடம் கேட்டால் கூலாக” ஆம். இதில் என்ன மிஸ்டேக் இருக்கிறது” என்கிறார் அவர். “திருமணத்திற்கு பிறகு என்னுடைய வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. காதல் கணவர், அத்தை, மாமா என்று மகிழ்சியாக வாழ்கிறேன். அதன் வெளிபாடு தான் இது. அவர்கள் அனைவரும் எனக்கு ரொம்பவே சப்போர்டாக இருக்கிறார்கள்.   ஷுட்டிங் வந்ததும் என்னுடைய வேலை எல்லாம் முடிச்சிட்டு எப்போ வீட்டிற்கு போவேன் என்று இருக்கும்.

இந்த வாழ்க்கை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.  என்னுடைய நடிப்பில் உருவாகியிருக்கும் ரங்கஸ்தலம் படத்தில் நான் கிராமத்து பெண்ணாக நடித்திருக்கிறேன். டீசரில் என்னை பார்த்த பலரும் நான் பார்ப்பதற்கு அச்சு அசல் கிராமத்து பெண் போல் இருப்பதாக பாரட்டினர். நேர்த்தியான கதையில் நடிக்கவே ஆர்வம் காட்டி வருகிறேன் “ என்றார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Actress samantha share about after marriage life

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X