Samantha Without Make-up Photo: தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா மேக்அப் இல்லாமல் வெளியிட்டுள்ள விக்டரி புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சமந்தாவின் மேக்அப் இல்லாத புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் நெட்டிசன்கள் கம்மெண்ட் மழையாக பொழிந்து வருகின்றனர்.
நடிகை சமந்தா, தமிழ் சினிமா கோலிவுட்டிலும், தெலுங்கு சினிமா டோலிவுட்டிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். கடந்த ஆண்டு வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்து பாராட்டுதல்களைப் பெற்றார்.
முன்னணி நடிகையாக வலம் வரும்போதே நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகும், சமந்தா திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்த கொரோனா பொது முடக்க காலத்தில், அனைத்து சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் நடிகர்கள், நடிகைகள் வீட்டில் முடங்கியுள்ளனர். அதே நேரத்தில், நடிகைகள் உடற்பயிற்சி வீடியோக்கள், வித்தியாசமான வேடிக்கையான சவால் வீடியோக்கள், தங்களுடைய அழகான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வரிசையில் நடிகை சமந்தா, இரண்டு விரல்களை நீட்டி விக்டரி என்று காட்டி தனது மேக்அப் இல்லாத புகைபடத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். பொதுவாக ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த சினிமா நடிகர்கள், நடிகைகளை மேக்அப் உடன் சினிமாவில் பார்த்து பழகிவிட்ட நிலையில், மேக் அப் இல்லாமல் பார்க்க ஆவல் இருக்கும்.
— Samantha Akkineni (@Samanthaprabhu2) May 28, 2020
அந்த வகையில், சமந்தாவின் மேக்அப் இல்லாத புகைப்படத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் அந்த புகைப்படத்தை லைக் செய்து கம்மெண்ட் செய்து வருகின்றனர்.
Classy as always 🙂
— Rajasekar (@sekartweets) May 28, 2020
சமந்தாவின் மேக்அப் இல்லாத புகைப்படத்தைப் பார்த்த ஒரு டுவிட்டர் பயனர், எப்போதும் கிளாஸ் என்று கம்மெண்ட் செய்துள்ளார். மற்றொருவர், “நீங்கள் வித்தியாசமாக இருக்கிறீர்கள. தயவுசெய்து அதிக உடற்பயிற்சி செய்ய வேண்டாம். நீங்கள் உங்கள் அழகை மற்றும் பப்ளியை இழந்துவருகிறீர்கள்” என்று தெரிவித்துள்ளார். இன்னொருவர் “நீங்கள் எப்படி உங்களுடைய புருவங்களை ஐப்ரோவ் செய்ய முடிந்தது?” என்று கேள்வி கேட்டுள்ளார். சமந்தாவின் மேக்அப் இல்லாத புகைப்படத்துக்கு ஒரு டுவிட்டர் பயனர், “இதென்ன அப்பா” என்று கம்மெண்ட் செய்துள்ளார்.
You looking weird.. Please don’t do over exercises. You are loosing your charm and bubbly ness. ????????
— Shravani Reddy (@ShravaniRedE) May 28, 2020
How did you manage to get the eyebrows done?
— Prabhasini (@cinnabar_dust) May 28, 2020
Idhendhi Abba????????
— Reddygari Ganeshwar Reddy (@ReddyGanesh14) May 28, 2020
வெகுளித்தனமான சிரிப்பு, அழகான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த சமந்தா டுவிட்டரில் வெளியிட்டுள்ள அவரது மேக்அப் இல்லாத புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.