‘பிரக்னன்சி நோய் அல்ல… அதை என்ஜாய் பண்றேன்’ தில்லாக ஸ்கேட்டிங் போகும் சீரியல் நடிகை!

கர்ப்பமாக இருக்கும்போது ஆபத்தான முறையில் இப்படி ஸ்கேட்டிங் செய்யலாமா என்று ட்ரோல் செய்தவர்களுக்கு, சமீரா ஷெரீப் “பிரக்னன்சி நோய் அல்ல அதை என்ஜாய் பண்றேன்” என்று தில்லாக ஸ்கேட்டிங் போகும் வீடியோவை வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.

Sameera Sherif, actress Sameera Sherif, Sameera Sherif scatting, Sameera Sherif pregnant, சீரியல் நடிகை சமீரா ஷெரீஃப், கர்ப்பமாக இருக்கிற சமீரா ஷெரீஃப், சமீரா ஷெரீஃப் ஸ்கேட்டிங், நெட்டிசன்கள் ட்ரோல், Sameera Sherif scatting video, Netizens trolls Sameera Sherif, Pregnancy not illness

பிரபல சீரியல் நடிகை சமீரா ஷெரீப் நிறைமாத கர்ப்பமாக உள்ள நிலையில் அவர் ஸ்கேட்டிங் செய்கிற வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், கர்ப்பமாக இருக்கும்போது ஆபத்தான முறையில் இப்படி ஸ்கேட்டிங் செய்யலாமா என்று ட்ரோல் செய்ய, அவர்களுக்கு, சமீரா ஷெரீப் “பிரக்னன்சி நோய் அல்ல அதை என்ஜாய் பண்றேன்” என்று தில்லாக ஸ்கேட்டிங் போகும் வீடியோவை வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.

பிரபல டிவி சீரியல் நடிகை சமீரா ஷெரீப் சில மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருப்பதாக ரசிகர்களுக்கு சமூக ஊடகங்களில் தெரிவித்தார். ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

சமீரா ஷெரீப் தான் கர்ப்பமான பிறகு, அவர் தொடர்ந்து வெளியிட்டு வரும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் இடையே விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ஏனென்றால், கர்பினியான நடிகை சமீரா ஷெரீப் வெளியிட்ட புகைப்படங்கள் ரிஸ்க் ஆனதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தனர். சமீரா ஷெரீப் வயிற்றில் குழந்தையை வைத்துக்கொண்டு கிரிக்கெட் விளையாடுவது, ட்ராம்போலினில் குதிப்பது போன்ற வீடியோக்களை வெளியிட்டார்.

நடிகை சமீரா ஷெரீப்பின் வீடியோக்களைப் பார்த்த ரசிகர்கள் நெட்டிசன்கள், கர்ப்பமாக இருக்கும்போது இப்படி எல்லாம் ரிஸ்கான விஷயங்களை செய்யலாமா என்று கேட்டு ட்ரோல் செய்தனர்.

இந்த சூழலில்தான், தற்போது நிறைமாத கர்ப்பினியாக இருக்கும் நடிகை சமீரா ஷெரீப் வைத்துக்கொண்டு ஸ்கேட்டிங் போர்டில் விளையாடி இருக்கிறார். சமீரா ஷெரீப் வயிற்றில் குழந்தையை வைத்துக்கொண்டு ஸ்கேட்டிங் செய்வதைப் பார்த்த ரசிகர்கள், நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். அதே நேரத்தில் பாதுகாப்பாக இருங்கள் என்றும் அறிவுரை கூறி வருகின்றனர்.

நடிகை சமீரா ஷெரீப் இப்படி தன்னை பற்றி விமர்சிப்பவர்களுக்கு பிரக்னன்ஸி என்பது நோய் அல்ல. அது ஒரு அழகான கட்டம். இந்த கட்டத்தில் மகிழ்ச்சியாக இருப்பதற்கான சிறந்த வழி முழுமையாக அனுபவிப்பது. என்று பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் இன்ஸ்டாகிராமில் குறிப்பிடுகையில், “இது என்னுடைய குழந்தை, என்ன செய்ய வேண்டும் என எனக்கு தெரியும்” என அவர் கூறி இருக்கிறார்.

மேலும், “பிரக்னன்ஸி என்பது நோய் அல்ல. அது ஒரு அழகான கட்டம். இந்த கட்டத்தில் மகிழ்ச்சியாக இருப்பதற்கான சிறந்த வழி முழுமையாக அனுபவிப்பது. பதிவுக்காக, தாய்க்கு தன் குழந்தைக்கு சிறந்தது தெரியும்! அவளுடைய உள்ளுணர்வை சந்தேகிப்பதை நாம் நிறுத்த வேண்டும். அவள் கடவுள் மீது நம்பிக்கை வைத்து, தன்னையும் தன் உடலையும் குழந்தையையும் நம்பும் வரை எதுவும் தவறாக இருக்காது. எனவே தயவுசெய்து, எதிர்பார்க்கும் தாயாக இருக்க விடுங்கள். ” என்று குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Actress sameera sherief are pregnancy and scatting netizens trolls

Next Story
ஸ்டைலான காஸ்டியூம்.. அசத்தும் ராஜா ராணி 2 சீரியல் நிஹரிகா ஸ்டில்ஸ்!serial actress niharika
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express