மாலத்தீவு சுற்றுலா சென்றுள்ள நடிகை சம்யுக்தா ஹெக்டே, பிகினி உடையில் தண்ணீருக்கு அடியில் மீன்களை போல் நீந்தும் வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
கிர்க்கி பார்ட்டி என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் சம்யுக்தா ஹெக்டே. தொடர்ந்து காலேஜ் குமார் படத்தில் நடித்த இவர், கிர்க்கி பார்ட்டி படத்தில் தெலுங்கு ரீமேக்கில் நடித்தார். அதனைத் தொடர்ந்து வாட்ச்மேன் படத்தில் நடித்த சம்யுக்தா, கோமாளி படத்தில் ஜெயம்ரவியின் காதலியாக நடித்திருந்தார்.
தொடர்ந்து பப்பி, தேள், மன்மதலீலை உள்ளிட்ட படங்களில் நடித்த சம்யுத்தா ஹெக்டே தற்போது க்ரீம் என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சம்யுக்தா ஹெக்டே அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். ந்த வகையில் தற்போது மாலத்தீவு சென்றுள்ள அவர், பிகினி உடையில் க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இவர் வெளியிடும் புகைப்படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது..
இதனிடையே தற்போது வித்தியாசமான தண்ணீருக்கு அடியில் பிகினி உடையில் மீன்களை போல் நீத்தும் சம்யுத்தா இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு சேர்த்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த பதிவுகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. மேலும் இந்த வீடியோ மற்றும் புகைப்படத்தை எடுத்த கேமராமேன்க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் வைத்துள்ள சம்யுத்தா ஹெக்டே, தற்போது மாலத்தீவுக்கு சென்ற இரண்டு நாட்களிலேயே அவர் பல கிளாமர் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வெளியிட்டு வருவதால் அவரின் ஃபாலோயர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“