கோமாளி பட நடிகை சம்யுக்தா மீது தாக்குதல் ஏன்? வீடியோ

ஜெயம் ரவியின் கோமாளி பட நடிகை சம்யுக்தா ஹெக்டே தனது தோழிகளுடன் பெங்களூருவில் ஒரு பூங்காவில் ஸ்போர்ட்ஸ் பிரா அணிந்து உடற்பயிற்சி செய்தபோது காங்கிரஸ் தலைவி கவிதா ரெட்டி தலைமையிலான கும்பல் தாக்கியதாக தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது.

By: Updated: September 6, 2020, 04:09:48 PM

ஜெயம் ரவியின் கோமாளி பட நடிகை சம்யுக்தா ஹெக்டே தனது தோழிகளுடன் பெங்களூருவில் ஒரு பூங்காவில் ஸ்போர்ட்ஸ் பிரா அணிந்து உடற்பயிற்சி செய்தபோது அவர் ஆபாசமாக உடை அணிந்துள்ளதாகக் கூறி காங்கிரஸ் தலைவி கவிதா ரெட்டி தலைமையிலான கும்பல் தாக்கியதாக தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது.

ஜெயம் ரவி நடித்து ஹிட்டான கோமாளி திரைபடத்தில் நடித்தவர் கன்னட சினிமா நடிகை சம்யுக்தா ஹெக்டே. பெங்களூருவில் வசித்துவரும் இவர் செப்டம்பர் 5 சனிக்கிழமை காலை தனது தோழிகளுடன் பெங்களூருவில் உள்ள ஒரு பூங்காவுக்கு சென்று ஸ்போர்ட்ஸ் பிராவுடன் உடற்பயிற்சி செய்ததாகவும் அப்போது ஒரு கும்பல் தாங்கள் ஆபாசமாக உடை அணிந்திருப்பதாகக் கூறி தாக்குதல் நடத்துகிறார்கள் என்று சம்யுக்தா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ் வீடியோ வெளியிட்டார்.

பெங்களுருவில் உள்ள பொது பூங்காவில் ஸ்போர்ட்ஸ் பிரா அணிந்து உடற்பயிற்சி செய்ததால் தாக்கப்பட்டதாக நடிகை சம்யுக்தா வெளியிட்ட வீடியோ சில நிமிடங்களிலேயே வைரலானது. சுமார் 17 நிமிடங்கள் கொண்ட அந்த வீடியோவில் சம்யுக்தா தான் ஆபாசமாக ஆடை அணியவில்லை ஸ்போர்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் பிரா அணிந்து பூங்காவில் தோழிகளுடன் உடற்பயிற்சி செய்தபோது தங்களை ஒரு வயதான பெண் மற்றும் ஒரு கும்பல் வந்து அவதூறாக திட்டி தாக்குகிறார்கள் என்று கூறுகிறார். போலீசார் வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதும் சம்யுக்தா அவரது தோழிகள் வெளியே செல்ல முடியாமல் பூங்காவில் வைத்து பூட்டியதாகவும் அந்த வீடியோவில் அவர் தெரிவித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

சம்யுக்தா ஹெக்டே, கவிதா ரெட்டி தலைமையிலான ஒரு கும்பல் தங்களை தாக்கியதாக சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிட்டு பரபரப்பான நிலையில், கவிதா ரெட்டி, ஒரு நடிகையின் மலிவான விளம்பர யுக்திக்காக இதற்கு தான் பதிலளிக்க விரும்பவில்லை என்று கூறினார்.

நடிகை சம்யுக்தா சனிக்கிழமை நள்ளிரவுக்குப்பின், ட்விட்டரில் பகிர்ந்த வீடியோவில், சம்யுக்தா தானும் அவரது 3 தோழிகளும் கவிதா ரெட்டியால் மிரட்டபட்டதாகக் கூறினார்.

 

View this post on Instagram

 

A post shared by Samyuktha Hegde (@samyuktha_hegde) on


“நாங்கள் 3 பெண்களும் பூங்காவில் ஹூலா ஹூப்ஸ் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது ஒரு வயதான பெண் வந்து எங்களைத் தாக்கினார். அவர் நாங்கள் கேபரே டான்ஸ் ஆடுவதாகவும் எனது தோழிகளில் ஒருவரையும் அடித்தார். அப்போது பூங்காவில் பல ஆண்கள் கவிதா ரெட்டியுடன் இணைந்துகொண்டு எங்களை துஷ்பிரயோகம் செய்தார்கள்.” என்று சம்யுக்தா வீடியோவில் கூறினார்.


சம்யுக்தா ஹெக்டே பெங்களூரு காவல்துறையை டேக் செய்து பதிவிட்ட ட்வீட்டில், “நம் நாட்டின் எதிர்காலம் இன்று நாம் என்ன செய்கிறோம் என்பதைப் பிரதிபலிக்கிறது. அகரா ஏரியில் கவிதா ரெட்டியால் நாங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டோம். கேலி செய்யப்பட்டோம். பல சாட்சிகளும் வீடியோ ஆதாரங்களும் உள்ளன, இடில் எங்கள் பக்கம் என்ன தவறு என்று பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார். ஆனால், சம்யுக்தா ஹெக்டே இது குறித்து போலீஸில் இன்னும் புகார் கொடுக்கவில்லை.

சம்யுக்தா ஹெக்டே இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ஒரு வீடியோவில், அவரும் அவரது தோழிகளும் அநாகரீகமான முறையில் பொதுவில் ஆடைகளைக் கலைந்ததாக குற்றம் சாட்டப்பட்டதாகவும், ஸ்போர்ட்ஸ் உடைகளில் உடற்பயிற்சி செய்ததை அவதூறாகப் பேசப்பட்டதாகவும் கூறினார்.

மேலும் அந்த வீடியோவ்ல், சம்யுக்தா ஹெக்டே கூறுகையில், “அவர்கள் எங்களைத் தாக்க முயன்றனர். எங்களை அவதூறாகப் பேசினார்கள். இங்கே நடித்து நாடகம் போடுவதற்கு பதிலாக மன்னிப்பு கேட்டு வெளியேறும்படி கேட்டனர்” என்று கூறினார்.

அதோடு, “அந்த பெண் எங்களைத் தாக்கும் வீடியோ எங்களிடம் உள்ளது. நாங்கள் அதை போலீசாருக்குக் காண்பிக்கிறோம். போலீசார் அந்தப் பெண்ணுக்கு மட்டுமே ஆதரவளிக்கிறார்கள்” என்று நடிகை சம்யுக்தா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் தெரிவித்துள்ளார்.


சம்யுக்தவின் குற்றச்சாட்டுகளுக்கு கவிதா ரெட்டி ட்விட்டரில் பதிலளிக்கையில், “நான் விக்ரம் ஹெக்டே குற்றச்சாட்டு ட்ரொல்களைப் பற்றியே கவலைப்படாதவள். சம்யுக்தா ஹெக்டேவின் குற்றச்சட்டுகளைப் பற்றி கவலைப்படுவேனா? அய்யோ மலிவான பப்ளிசிட்டி நடிகை வெளியிடுள்ள வீடியோ விளம்பரத்திற்காக செய்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.” என்று தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை மாலை பாஜக எம்.பி. ஷோபா கரண்ட்லேஜே சர்ச்சையைப் பற்றி கூறுகையில், “சம்யுக்தாவுக்கு நடந்தது உண்மையில் துரதிர்ஷ்டவசமானது. நம்முடைய சமூகத்தில் இதுபோன்ற கலாச்சார போலீஸுக்கு இடமில்லை!” என்று கவிதா ரெட்டிக்கு எதிராக தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Actress samyuktha hegde shares video while she work out in park with sports bra she alleged attacked lead by congress leader kavitha reddy

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X