சிலம்பாட்டம் (2008) திரைப்படத்தில், சிலம்பரசனுக்கு ஜோடியாக நடித்த நடிகை சனா கான், மதகுரு முப்தி அனாஸை குஜராத்தில் மணந்தார்.
இவர்கள் திருமணத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. வீடியோவில், சனாவும் அவரது கணவரும் மாடிப்படிகளில் கைகோர்த்து நடந்து வருகிறார்கள். பின்னர் நிக்கா முபாரக் என்று எழுதிய ஒரு கேக்கை வெட்டுகிறார்கள். சனா ஒரு வெள்ளை கவுனிலும், முப்தி ஒரு வெள்ளை குர்தா மற்றும் பைஜாமாவில் காணப்படுகிறார்கள்.
“அல்லாவின் பொருட்டு ஒருவருக்கொருவர் நேசித்தோம். இருவரும் திருமணம் செய்துக் கொண்டோம். அல்லா நம்மை ஒன்றிணைத்து, வழிநடத்தட்டும்” என சனா கான் தனது திருமண விஷயத்தை இன்ஸ்டாகிராமில் உறுதிப்படுத்தினார்.
View this post on Instagram
கடந்த ஆண்டு மெர்வின் லூயிஸ் என்பவரைக் காதலித்து வருவதாக புகைப்படங்களுடன் அறிவித்தார் சனா. நடப்பாண்டு தொடக்கத்தில் மெர்வின் லூயிஸைப் பிரிந்துவிட்டதாக அறிவித்து, அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இஸ்லாம் மதத்தை முழுமையாக பின்பற்றுவதற்காகவும் திரையுலகை விட்டு விலகுவதாகவும் சனா கான் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் நடிகை சனா கானுக்கு குஜராத் மாநிலத்தை சேர்ந்த இஸ்லாமிய அறிஞரான முஃப்தி அனஸ் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. சூரத்தில் நடந்த இந்த இத்திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”