தமிழில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான அம்புலி படத்தின் மூலம் சினிமாவின் அறிமுகமானவர் சனம் ஷெட்டி. மிஸ் சவுத் இந்தியா அழகி பட்டம் வென்ற இவர் தென்னிந்திய மொழிகளில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது ஹன்சிகாவுடன் மஹா, எதிர்வினையாற்று, பார்த்திபன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட இவர், அந்த நிகழ்ச்சில் கலந்துகொண்ட சகபோட்டியாளர் தர்ஷன் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்துகொண்டு புகழின் உச்சிக்கு சென்ற அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமானது.தற்போது அரசியல் உட்பட பல்வேறு விஷயங்களை பற்றி வெளிப்படையாக கருத்துக்களை கூறி கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறார். சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து நிர்வாகிகள் வெளியேறுவது குறித்து தனது கருத்தை பதிவிட்டிருந்தார்.
அந்த வகையில், கடந்த பிக்பாஸ் தொடரில் கலந்துகொண்ட, தொலைக்காட்சி தொகுப்பாளினி, அர்ச்சனா தனது யூடியூப் சேனலில் பாத்ரூம் டூர் வீடியோ பதிவிட்டு பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த சனம் தனது ட்விட்டர் பதிவில், "1008 பிரச்சனை இந்த நாட்டுல.. உங்க பாத்ரூம் பிரச்சனை வெச்சுக்கோங்கமா உங்க வீட்டுல" என குறிப்பிட்டிருந்தார். இந்த ட்விட் சமூக வலைதளங்களில் பெரும் வைரலான நிலையில, நெட்டிசன்கள் பல்வேறு கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர்.
Quick peek in YouTube and my mind voice:
1008 prachanai indha naatula,
Unga bathroom prachanai vechikonga ma unga veetula!
Gn all 🙋#podhuma— Sanam Shetty (@SamSanamShetty1) May 18, 2021
அந்த வகையில், சனம் ஷெட்டியின் பதிவுக்கு கமெண்ட் செய்துள்ள ஒருவர், '1008 பிரச்சனை உங்க ஸ்டேட்ல நடக்குது. நீங்க எதுக்கு மா தமிழ்நாட்டுல பாலிடிக்ஸ் பங்கிட்டு இருக்கீங்க. உங்க ஸ்டேட்ல பண்ணுங்க' என கூறி உள்ளார். தற்போது இதற்கு பதில் அளித்துள்ள சனம் தனது ட்விட்டர் பதிவில், "நீங்க டேக்ஸ் பே பண்ணுறீங்களாமா? நான் பண்றேன். இந்திய அரசுக்கு. இந்தியால எங்கே என்ன தப்பு நடந்தாலும் கேக்கலாம். இந்திய குடிமக்களின் உரிமைகளை பற்றி படியுங்கள்.
Neenga Tax pay panrengala ma? Naa panre.Government of India ku. India le enga enna thappu nadandhaalum kekalam. Read Rights of Indian citizens. Karnataka gave me birth, Tamilnadu gave me food,iv worked in many other states in India and abroad. I have my gratitude to the world.
— Sanam Shetty (@SamSanamShetty1) May 19, 2021
கர்நாடகா என்னை பெற்றுடுத்தது, தமிழ்நாடு எனக்கு உணவு வழங்கியுள்ளது. மற்ற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் நான் பணியாற்றி இருக்கிறேன். இந்த உலகத்திற்கு நான் நன்றி உள்ளவளாக இருப்பேன்" என பதிவிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.