”தப்பு எங்க நடந்தாலும் நான் கேட்கலாம்” ட்விட்டர் வாசிக்கு சனம் ஷெட்டி பதில்

Actress Sanam Shetty : தனது ட்விட் குறித்து கேள்வி கேட்ட ட்விட்டர் வாசி ஒருவருக்கு நடிகை சனம் ஷெட்டி ட்விட் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான அம்புலி படத்தின் மூலம் சினிமாவின் அறிமுகமானவர் சனம் ஷெட்டி. மிஸ் சவுத் இந்தியா அழகி பட்டம் வென்ற இவர் தென்னிந்திய மொழிகளில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது ஹன்சிகாவுடன் மஹா, எதிர்வினையாற்று, பார்த்திபன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட இவர், அந்த நிகழ்ச்சில் கலந்துகொண்ட சகபோட்டியாளர் தர்ஷன் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்துகொண்டு புகழின் உச்சிக்கு சென்ற அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமானது.தற்போது அரசியல் உட்பட பல்வேறு விஷயங்களை பற்றி வெளிப்படையாக கருத்துக்களை கூறி கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறார். சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து நிர்வாகிகள் வெளியேறுவது குறித்து தனது கருத்தை பதிவிட்டிருந்தார்.

அந்த வகையில், கடந்த பிக்பாஸ் தொடரில் கலந்துகொண்ட, தொலைக்காட்சி தொகுப்பாளினி, அர்ச்சனா தனது யூடியூப் சேனலில் பாத்ரூம் டூர் வீடியோ பதிவிட்டு பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த சனம் தனது ட்விட்டர் பதிவில், “1008 பிரச்சனை இந்த நாட்டுல.. உங்க பாத்ரூம் பிரச்சனை வெச்சுக்கோங்கமா உங்க வீட்டுல” என குறிப்பிட்டிருந்தார். இந்த ட்விட் சமூக வலைதளங்களில் பெரும் வைரலான நிலையில, நெட்டிசன்கள் பல்வேறு கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், சனம் ஷெட்டியின் பதிவுக்கு கமெண்ட் செய்துள்ள ஒருவர், ‘1008 பிரச்சனை உங்க ஸ்டேட்ல நடக்குது. நீங்க எதுக்கு மா தமிழ்நாட்டுல பாலிடிக்ஸ் பங்கிட்டு இருக்கீங்க. உங்க ஸ்டேட்ல பண்ணுங்க’ என கூறி உள்ளார். தற்போது இதற்கு பதில் அளித்துள்ள சனம் தனது ட்விட்டர் பதிவில், “நீங்க டேக்ஸ் பே பண்ணுறீங்களாமா? நான் பண்றேன். இந்திய அரசுக்கு. இந்தியால எங்கே என்ன தப்பு நடந்தாலும் கேக்கலாம். இந்திய குடிமக்களின் உரிமைகளை பற்றி படியுங்கள்.

கர்நாடகா என்னை பெற்றுடுத்தது, தமிழ்நாடு எனக்கு உணவு வழங்கியுள்ளது. மற்ற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் நான் பணியாற்றி இருக்கிறேன். இந்த உலகத்திற்கு நான் நன்றி உள்ளவளாக இருப்பேன்” என பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Actress sanam shetty reply to twitter person question viral twitt

Next Story
Sun TV Serial; சுந்தரியை பிடிக்க நெருங்கும் கீதா… காரில் எஸ்கேப் ஆன சுந்தரி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express