எய்ட்ஸ் தடுக்க தாம்பத்தியம் வேண்டாம்னு சொல்ல முடியுமா? நாய்களுக்கு ஆதரவாக ஒலிக்கும் சீரியல் நடிகை குரல்!

நடிகை சந்தியா ஜகர்லமுடி நாய்கள் தொடர்பான பதிவுகள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் பகிர்ந்து வருபவர். அவர் இப்போது வந்துள்ள தெரு நாய் தொடர்பான விவகாரத்தை எதிர்த்து சில கேள்விகளை கேட்டுள்ளார்.

நடிகை சந்தியா ஜகர்லமுடி நாய்கள் தொடர்பான பதிவுகள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் பகிர்ந்து வருபவர். அவர் இப்போது வந்துள்ள தெரு நாய் தொடர்பான விவகாரத்தை எதிர்த்து சில கேள்விகளை கேட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
stray dogs

டெல்லியில் தெருநாய்களை பிடித்து காப்பகத்தில் அடைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெருநாய்கள் குழந்தைகளை தாக்கிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிக அளவில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

Advertisment

தெரு நாய் கடியால் ரேபிஸ் ஏற்பட்டு ஒரு வாலிபரும், இளம் பெண்ணும் கஷ்டப்படும் வீடியோவும் வலம் வந்து கொண்டிருக்கிறது.

இந்த தெரு நாய்களிடம் இருந்து குழந்தைகள், மக்களை காப்பாற்ற வேண்டும் என்று பலரும் தெரிவித்த நிலையில் உச்ச நீதிமன்றம் இப்படியொரு உத்தரவிட்டிருக்கிறது.

அந்த உத்தரவை கேட்ட சீரியல் நடிகை சந்தியா அவரது கருத்தை பற்றி இப்போது ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். 

Advertisment
Advertisements

சன் டிவியில் பிரபலமான வம்சம் சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை சந்தியா ஜகர்லமுடி. ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்து நடித்திருந்த இவர், சன்டிவியின் சந்திரலேகா சீரியலிலும் நடித்துள்ளார்.

மேலும் பேய்கள் ஜாக்கிரதை என்ற படத்திலும் நடித்துள்ள சந்தியா, தற்போது தெரு நாய்களை பாதுகாத்து வரும் பணியை செய்து வருகிறார்.

"ஒரேயொரு கேஸ். ரேபிஸ் மூலம் மரணம் ஏற்படாது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த பெண்ணுக்கு நடந்ததால் 3 லட்சம் நாய்களை பிடித்து அடைக்கப் போகிறார்கள் இல்லை கொல்லப் போகிறார்கள். நாய்களை எல்லாம் கொல்லப் போகிறார்கள் என்பதை நாம் ஏன் ஏற்கக் கூடாது. 

8 வாரங்களில் அத்தனை நாய்களையும் பராமரிக்கும் அளவுக்கு அரசிடம் வசதி இல்லை. நாய்களை மொத்தமாக கொல்லப் போகிறார்கள். தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடாத அரசு மற்றும் லோக்கல் முனிசிபாலிட்டியின் கையாலாகாத தனத்தை காட்டுகிறது.

ஒரு சில நாய்கள் தொந்தரவாக இருக்கும் பட்சத்தில் ஊரில் உள்ள அணைத்து அப்பாவி ஜீவன்களையும் இப்படி அடைக்கணுமா? அவர்கள் சுதந்திரத்தை இப்படி பறிக்கணுமா?

நம் நாட்டின் மக்கள் தொகை 1.5 பில்லியன். 2024 படி வெறும் 54 ரேபிட் இறப்புகள் உள்ளன. இதை விட முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய எத்தனையோ பிரெச்சனைகள் உள்ளது. அதை ஏன் யோசிக்கவே இல்லை அரங்கம்." என்று பல அதிரடியான கேள்விகளை கேட்டுள்ளார். 

மேலும் தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு அவர், "இந்தியாவில் அப்படி ஒரு ஷெல்டர் என்று இல்லவே இல்லை. அதை தயார் செய்வதற்க்கே பல கோடிகள் செலவாகும். மக்கள் பணம் இதை விட ஒரு முக்கியமான விஷயத்துக்கு செலவு செய்யலாமே" என்று கூறியுள்ளார். 

அவர் கடைசியாக எய்ட்ஸ் தடுப்பதற்கு தாம்பத்தியமே வேண்டாம் என்று கூறுவீர்களா அல்லது காண்டொம்ஸ் பயன்படுத்த சொல்வீர்களா? என்ற கேள்வியையும் வைத்துள்ளார். 

இவருக்கு ஆதரவாக பல கமெண்ட்களில் தங்களது சப்போர்ட்டை தெரிவித்து வருகிறார்கள். 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: