தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம், இந்திய மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள சங்கவி கடைசியாக தமிழில் சமுத்திரக்கனியுடன் 'கொளஞ்சி' என்ற படத்தில் நடித்திருந்தார்.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை சங்கவி. இவர் நடிகர் அஜித் நடிப்பில் கடந்த 1993-ம் ஆண்டு வெளியான அமராவதி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, விஜயுடன் ரசிகன் படத்தில் நடித்தார். இதன் பிறகு நாட்டாமை, லக்கிமேன், விஷ்ணு, கோயம்புத்தூர் மாப்பிள்ளை, உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்தார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம், இந்திய மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள சங்கவி கடைசியாக தமிழில் சமுத்திரக்கனியுடன் கொளஞ்சி என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் கோகுலத்தில் சீதை, சாவித்திரி, காலபைரவா என சில சீரியல்களிலும் நடித்துள்ள சங்கவி தாமதாமாக திருமணம் செய்துகொண்டார்.
கடந்த 2016-ம் ஆண்டு ஐடி நிபுணரான வெங்கடேஷ் என்பரை திருமணம் செய்துகொண்ட சங்கவிக்கு கடந்த 2020-ம் ஆண்டு குழந்தை பிறந்தது. தாமதமாக திருமணம் செய்துகொண்டாலும், விரைவில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்த சங்கவிக்கு முதல் குழந்தை உருவான 7-வது வாரத்தில் இதய துடிப்பு இல்லை என்று கூறி அபார்ஷன் செய்ய சொல்லிவிட்டதாக கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியான சங்கவி தான் தாமதமாக திருமணம் செய்துகொண்டது தான் இதற்கு காரணமாக இருக்குமா என்று யோசித்துள்ளார். இதனால் பெரிய மனஉளைச்சலில் இருந்த சங்கவிக்கு பலரும் நீ செய்தது தவறு என்று அவரை குறை சொல்லும் வகையிலே பேசியுள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் கர்ப்பமாக இருக்கும்போது டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றது தான் இதற்கு காரணம் என்று பலரும் கூறினார்களாம். அதனால் இனிமேல் அதை செய்யக்கூடாது என்று முடிவு செய்துள்ளார்.
அதன்பிறகு அடுத்த சில மாதங்களில் 2-வது முறையாக கர்ப்பம் தரித்த சங்கவிக்கு இந்த முறை 8-வது மாதத்தில் அதே இதய துடிப்பு பிரச்சனை வந்துள்ளது. இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான சங்கவி வீட்டை விட்டு வெளியே வரவில்லை என்றும், அந்த நேரத்தில் அவரது கணவர் தான் அவருக்கு ஆறுதலாக இருந்ததாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து அடுத்த சில மாதங்களில் சங்கவி 3-வது முறையாக கர்ப்பமாகியுள்ளார்.
இந்த முறை எந்த பிரச்னையும் இல்லாமல் கடந்த 2020-ம் ஆண்டு ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். தற்போது குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் சங்கவி அவ்வப்போது குழந்தையின் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அதே சமயம் கஷ்டத்தில் கைக்கொடுக்காத உறவுகள் பலரின் வாழ்க்கையில் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று சங்கவி தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“