New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/01/sangavi.jpg)
தமிழ் சினிமாவில் 90களில் முன்னனி நடிகையாக இருந்த சங்கவியின் குழந்தையின் அழகான புகைப்படம் இங்கே
Actress Sangavi’s daughter beautiful photo goes viral: விஜய் பட நடிகை சங்கவியின் அழகான குழந்தையின் சமீபத்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
90 களில் தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சங்கவி. இவர் அமராவதி படத்தில் அஜித்துடன் இணைந்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் விஜய்யுடன் இணைந்து ரசிகன் படத்தில் நடித்தார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் என 80க்கும் மேற்பட்ட படங்கள் நடித்துள்ள சங்கவி, தமிழில் நடிகர் விஜய் உடன் அதிக படங்களில் சேர்ந்து நடித்துள்ளார். விஜய் உடன் ரசிகன், விஷ்ணு, ரிஷி, நிலாவே வா உள்ளிட்ட படங்களில் ஜோடி சேர்ந்துள்ளார் சங்கவி. மேலும் கமல், ரஜினி, சத்யராஜ், சரத்குமார் உள்ளிட்ட முன்னனி நடிகர்களின் படங்களிலும் நடித்துள்ளார். சினிமா மட்டுமல்லாது கோகுலத்தில் சீதை, தாய் வீடு, சாவித்திரி உள்ளிட்ட சீரியல்களிலும் சங்கவி நடித்துள்ளார்.
பின்னர் 2016 ல் மென்பொறியாளர் வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2020ல் ஒரு பெண் குழந்தை பிறந்தது.
தற்போது தனது குழந்தையுடன் நேரத்தை செலவிட்டு வரும் சங்கவி, குழந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் பதிவிடப்பட்ட குட்டி சங்கவி சான்வியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.