வாய் நல்லா பேசுற, பாட்டு வராதா? பிரபல நடிகையின் முடியை பிடித்து இழுத்து அடித்த பாடகர்: யார் தெரியுமா?
நடிகை சங்கீதா, தனது திருமண வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு சுவாரசிய சம்பவத்தை சமீபத்தில் தெரிவித்துள்ளார். இவரது கணவர் பிரபல பாடகரான க்ரிஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை சங்கீதா, தனது திருமண வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு சுவாரசிய சம்பவத்தை சமீபத்தில் தெரிவித்துள்ளார். இவரது கணவர் பிரபல பாடகரான க்ரிஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவின் க்யூட் ஜோடி என்றால் பாடகர் க்ரிஷ் மற்றும அவரது மனைவியும், நடிகையுமான சங்கீதாவை கூறலாம். திரைத்துறையைச் சேர்ந்த இவர்கள் இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.
Advertisment
இவர்களில் நடிகை சங்கீதா சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் மாறுபட்ட மற்றும் அழுத்தமான கதாபாத்திரங்களில் தோன்றியுள்ளார். அதன்படி, 'பிதாமகன்', 'தனம்', 'மன்மதன் அம்பு' போன்ற படங்களை இதற்கு எடுத்துக் காட்டாக கூறலாம்.
மற்றொரு புறம், தனது வசீகரிக்கும் குரலால் எண்ணற்ற ரசிகர்களை பாடகர் க்ரிஷ் கொண்டுள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பின்னணி பாடகராக க்ரிஷ் பணியாற்றி வருகிறார்.
தமிழ் சினிமாவில் 'வேட்டையாடு விளையாடு' திரைப்படத்தில் இடம்பெற்ற 'மஞ்சள் வெயில்' பாடல் மூலம் க்ரிஷ் அறிமுகமானார். அதன் பின்னர், 'உன்னாலே, உன்னாலே', 'பச்சைக் கிளி முத்துச்சரம்', 'தாம் தூம்', 'பீமா', 'வாரணம் ஆயிரம்', 'அயன்' போன்ற பல்வேறு படங்களில் பாடியுள்ளார்.
Advertisment
Advertisements
ஏறத்தாழ பல மொழிகளில் 3 ஆயிரத்திற்கு அதிகமான பாடல்களை க்ரிஷ் பாடியுள்ளார். இதனிடையே, கடந்த 2009-ஆம் ஆண்டு நடிகை சங்கீதா மற்றும் பாடகர் க்ரிஷ் ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில், தன்னை பாடுவதற்காக க்ரிஷ் அழைத்துச் சென்ற சுவாரசிய சம்பவத்தை சங்கீதா நினைவு கூர்ந்துள்ளார். பிகைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் இதனை அவர் பதிவு செய்துள்ளார்.
அதன்படி, "அது என்ன உனக்கு பாட்டு வராது? நான் உனக்கு கத்துத் தரேன் என்று அழைத்துச் சென்றார். பின்னர், உட்கார வைத்து அடிக்க ஆரம்பித்து விட்டார். முடியெல்லாம் பிடித்து இழுத்து, ஏன் உனக்கு பாட்டு வராதா என்று கேட்டார். வாய் நல்லா பேசுற, பாட்டு மட்டும் வராதா?" என்று கேட்டார் என தனது கணவரும், பாடகருமான க்ரிஷ் குறித்து நடிகை சங்கீதா வேடிக்கையாக தெரிவித்துள்ளார்.