/indian-express-tamil/media/media_files/2025/07/17/ilayaraja-santhanam-2025-07-17-14-28-40.jpg)
இளையராஜாவின் பாடல்கள் வெறும் இசை மட்டுமல்ல, அவை காதலைச் சொல்லும் தூதுவனாகவும் திகழ்கின்றன என்பதை நகைச்சுவை நடிகர் சந்தானம் தனது நிஜ வாழ்க்கைப் பின்னணியில் நடந்த சம்பவத்தோடு ஒப்பிட்டு கூறியுள்ளார். "ராஜா சாருடைய பாடலை கேட்டால் நிச்சயம் ஒரு பெண்ணை காதலிப்போம்" என்று அவர் நகைச்சுவையாக கூறியிருப்பது தமிழ் டிக்கெட் டாக்கீஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றில் பகிரப்பட்டுள்ளது.
நகைச்சுவை நடிகர் சந்தானம் லொள்ளு சபா நிகழ்ச்சிக்குப் பிறகு, திரைப்பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. 2004 ஆம் ஆண்டு வெளியான மன்மதன் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். பின்னர், பேரழகன், பாஸ் என்கிற பாஸ்கரன், வேலாயுதம் போன்ற பல படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்தார்.
நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இளையராஜாவின் பாடல்களை தன் வாழ்வில் பயன்படுத்தி நடந்த ஒரு நகைச்சுவையான சம்பவத்தை பகிர்ந்துள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த டைப்பிங் கிளாஸ் அனுபவத்தைப் சந்தானம் பகிர்ந்து கொண்டார்.
சந்தானம் டைப்பிங் கிளாஸ் அருகே உள்ள வீட்டிற்கு ஒரு புதிய பெண் வந்திருந்தாராம். அவர் தெலுங்கு மொழி பேசக்கூடியவர் என்பதால், அவரிடம் பேசுவதற்கு சந்தானம் தயங்கினார். அப்போது அவரது நண்பர், தெலுங்கில் பேசினால்தான் அந்தப் பெண்ணிடம் பழக முடியும் என்று யோசனை கூறினான். ஆனால் சந்தானத்திற்கு தெலுங்கு சுத்தமாகத் தெரியாது என்று கூறி இருக்கிறார்.
நண்பனின் யோசனையின்படி, இளையராஜாவின் தெலுங்கு பாடல்களைக் கேட்டால் எளிதாக வார்த்தைகளைப் பிடித்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார். அதன்படி, "கொடியிலே மல்லிகைப்பூ" பாடலின் தெலுங்கு வடிவமான "தேகலோ பூவு சரணம் வரும்" பாடலைக் கேட்கத் தொடங்கினார். அந்தப் பாடலில் வரும் "மனசு தடுமாறும்" என்ற வரியை அந்தப் பெண்ணிடம் பாட சந்தானம் முடிவு செய்தார்.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்தப் பெண் தனியாக இருப்பதை அறிந்த சந்தானம், "தெலிசி தெலியந்தா... இது தெலிசி கெஜரிந்தா" என்று பாடிக்கொண்டே ஜன்னல் வழியாகப் பார்க்க, திடீரென்று அந்தப் பெண்ணின் அப்பா என்ட்ரி ஆகிவிட்டார். "எப்புடோ ஜருகிந்தா... அது இப்புடே தெலிசிந்தானே" என்று கோபத்துடன் சந்தானத்தை ஜன்னல் வழியாகவே கம்பால் அடிக்க முயன்றார். இந்தச் சம்பவம் சந்தானத்திற்கு டைப்பிங் கிளாஸ் போகும் போதெல்லாம் நினைவுக்கு வருவதாகக் கூறினார்.
இந்தச் சம்பவம் இளையராஜாவின் பாடல்கள் காதல் உணர்வுகளைத் தூண்டுவதுடன், சில சமயங்களில் எதிர்பாராத சிக்கல்களையும் உருவாக்கும் என்பதை நகைச்சுவையுடன் கூறியுள்ளார். நகைச்சுவை நடிகர் சந்தானம் பல ஆண்டுகளுக்கு முன்பு நகைச்சுவையாக இளையராஜாவின் முன்பு மேடையிலேயே நகைச்சுவையாக கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.